புதுவை- நூலகம் அமைக்கும் ப.சண்முகம்
காரைக்கால்: சுமார் 50 ஆண்டுகால அரசியல் பணிக்குப் பின்னர், சொந்த ஊரில் நூலகம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் புதுவை முன்னாள் முதல்வர் ப.சண்முகம்.
காரைக்கால் மாவட்டம், நெடுங்காட்டைச் சேர்ந்த ப.சண்முகம், புதுவையின் முதல்வராகவும் பின்னர், பிரதேச காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றியவர். அண்மையில் இவர் மாற்றப்பட்டு ஏ.வி.சுப்பிரமணியம் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இளம் வயதிலேயே காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த சண்முகம், தன் 50 ஆண்டுகால அரசியலில் பல தலைவர்களின் ஆட்சியில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினராக மட்டுமன்றி பல்வேறு பதவிகளையும் வகித்தவர்.
மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டவுடன் கடந்த மாதம் நெடுங்காட்டுக்கு வந்த சண்முகம், வீட்டுக்கு அருகே உள்ள பரந்த பகுதியில் ஏற்கெனவே உள்ள கட்டடத்தில் மாநிலத்திலேயே இல்லாத வகையிலான அரிய நூலகத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து ப.சண்முகம் கூறியது:
காங்கிரஸ் கட்சி பற்றியும், அதன் பல்வேறு தலைவர்களின் செயல்பாடுகள், பேச்சுகள் என்று ஒட்டுமொத்தமாக கட்சியின் வரலாற்றை இளைஞர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் நூலகம் அமைக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரிக்கு நேருவும், காமராஜரும் வந்தபோது, அமர்ந்த நாற்காலி, மேஜை, பல்வேறு தலைவர்களின் அரிய புகைப்படங்கள் ஆகியன நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்த நூலகம் முழுமை பெற ஓராண்டு ஆகும். இவை யாவும் சுய விளம்பரத்துக்காக அல்ல; இளைஞர்கள் காங்கிரஸ் கட்சி குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே என்றார் சண்முகம்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications