ஹிட்லர் ஹிட் லிஸ்ட்டில் சாப்ளின்!

யூதர்களை விரட்டி விரட்டி அழித்தவர் ஹிட்லர். யூத இன மக்களின் எமன். லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்தார்.
அவரது ஹிட் லிஸ்ட்டில், ஏராளமான பிரபலங்கள் இடம் பெற்றிருந்தனர். புகழ் பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் எய்ன்ஸ்டீனும் அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்தார். அதேபோல யூத குலத்தைச் சேர்ந்த நடிகர் சார்லி சாப்ளினும் ஹிட்லரின் கொலைப் பட்டியலில் இடம் பெற்றிருந்ததாக ஒரு தகவல் இப்போது வெளியாகியுள்ளது.
ஜூடென் செஹென் டி ஏன் (யூதர்கள் உன்னைக் கவனிக்கிறார்கள்) என்ற பெயரில் வெளியாகியுள்ள நூலில்தான் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
யூத எதிர்ப்புப் பிரசாரகரான டாக்டர் ஜோஹன் வான் லீர்ஸ் என்பவர் இந்த நூலை எழுதியுள்ளார். இதில் ஹிட்லர் கொன்று குவிக்க வேண்டிய யூத பிரபலங்களின் பெயர்கள், புகைப்படங்களுடன் வெளியாகியுள்ளன.
இந்த நூல் 1930ம் ஆண்டு பெர்லினில் வெளியிடப்பட்டது. இந்த நூலைப் பார்த்துத்தான், நாஜிப் படையினர் அதில் இடம் பெற்றிருந்தவர்களை தேடித் தேடிக் கொன்றனர். விஞ்ஞானி ஆல்பர்ட் ஐய்ன்ஸ்டீனின் பெயரும் இதில் இருந்தது.
இப்போது இந்த பழம்பெரும் கொலைப் பட்டியல் நூல், அடுத்த மாதம், லண்டனில் ஏலத்தில் விடப்படவுள்ளது.
ஹிட்லரின் கொலைப் பட்டியலில் யாரெல்லாம் இருந்தார்கள், எந்தெந்த பிரபலங்கள் எல்லாம் ஹிட்லரின் துவேஷப் பட்டியலில் இடம் பிடித்திருந்தார்கள் என்பதை வெளியிட்டுள்ளார் ஜோஹன்.
யூத குலத்தைச் சேர்ந்த பொருளாதார நிபுணர்கள், பத்திரிக்கையாளர்கள், விஞ்ஞானிகள், கலைத்துறையினர் என பல்வேறு தரப்பினரும் இந்தக் கொலைப் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர்.
இந்த நூலைப் பார்த்துத்தான் சார்லி சாப்ளின் தனது வெகு பிரபலமான தி கிரேட் டிக்டேட்டர் படத்தை எடுத்தாராம். 1940ம் ஆண்டு வெளியான அப்படத்தில் டொமைனியா என்ற தேசத்தின் சர்வாதிகாரி அடினாய்ட் ஹிங்கல் என்ற வேடத்தில் நடித்திருந்தார் சாப்ளின். இந்த வேடம் ஹிட்லரை இமிட்டேட் செய்து சித்தரிக்கப்பட்ட வேடம்.
இந்த நூல், யூதர்களை குறி வைத்து எழுதப்பட்டதாகும். ஜெர்மனி மக்களை யூதர்களுக்கு எதிராக போருக்குத் திருப்புவதற்காக எழுதப்பட்டதாகும். உலகை ஆக்கிரமிக்க நினைக்கும் யூதர்களை ஒழிக்க அனைவரும் ஒன்று திரள வேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதப்பட்டதாகும்.
இந்த நூலில் யூத இனத்தின் பிரபலங்கள் அவர்களின் புகைப்படங்களோடும், அவர்களைப் பற்றிய குறிப்புகளோடும் இதில் இடம் பெற்றுள்ளனர்.
இந்தப் பட்டியலில் சார்லி சாப்ளினும் இடம் பிடித்திருந்ததுதான் முக்கியமானது. இத்தனைக்கும் அவர் யூதரே கிடையாது. இருப்பினும், சாப்ளினின் பூர்வீகம் யூத குலம்தான். எனவே அவரும் ஒரு வகையில் யூதர்தான். எனவே அவரையும் தீர்த்துக் கட்ட வேண்டும் என்று ஹிட்லர் கூறியுள்ளார்.
இந்த நூலைப் பார்த்து சாப்ளின் நிச்சயம் பயந்து போயிருக்க வேண்டும் என்கிறார்கள். காரணம், இந்த நூலில் இடம் பெற்றுள்ளவர்களில் பெரும்பாலானவர்களை நாஜிக்கள் கொன்று தீர்த்து விட்டனர்.
இந்த நூல் குறித்து திரைப்பட ஆய்வாளர் கெவின் பிரவுன்லா கூறுகையில், தனது பெயர் ஹிட்லரின் கொலைப் பட்டியலில் இடம் பெற்றிருப்பதைப் பார்த்துத்தான் சாப்ளின் தி கிரேட் டிக்டேட்டர் படத்தையே எடுத்தார்.
நாஜிக்கள் தவறுதலாக சாப்ளின் பெயரை இந்த நூலில் யூதர்களுடன் சேர்த்து இணைத்துள்ளனர். ஆனால் தான் யூதர் இல்லை என்று ஒருபோதும் சாப்ளின் கூறியதில்லை என்கிறார் அவர்.
-
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications