ஹிட்லரைக் கொல்ல முயன்றவர் மரணம்
பெர்லின்: ஜெர்மனியின் அதிபராக ஹிட்லர் இருந்தபோது அவரை கொலை செய்ய இரு முறை முயன்று தோல்வியுற்ற ராணுவ அதிகாரி பிலிப் வான் போயஸ்லேகர் தனது 90வது வயதில் பெர்லின் நகரில் மரணமடைந்தார்.
ஹிட்லர் ஆட்சிக்காலத்தின்போது ராணுவ அதிகாரியாக இருந்தவர் போயஸ்லேகர். ஹிட்லரைத் தீர்த்து கட்ட இருமுறை முயன்றவர் போயஸ்லேகர். 1943ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி, கிழக்கு ஜெர்மனிக்கு ஹிட்லர் வந்தபோது போயஸ்லேகர் மற்றும் அவரது சகோதரர் உள்பட 8 ராணுவ அதிகாரிகள் ஹிட்லரைத் தீர்த்துக் கட்டத் திட்டமிட்டனர்.
8 பேரும் சேர்ந்து ஹிட்லரை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முடிவு செய்திருந்தனர். ஆனால் அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த ஹென்ரிச் ஹிம்லர் என்பவர் ஜகா வாங்கவே இந்தத் திட்டம் சீர்குலைந்தது.
பின்னர் 2004ம் ஆண்டு போயஸ்லேகர் அளித்த ஒரு பேட்டியில், அந்தத் திட்டம் மட்டும் நடந்திருந்தால் நிச்சயம் ஹிட்லர் கொல்லப்பட்டிருப்பார். ஆனால் ஹிம்லர் திடீரென பின்வாங்கியதால் நாங்கள் திட்டத்தைக் கைவிட வேண்டியதாகி விட்டது என்று கூறியிருந்தார் போயஸ்லேகர்.
பின்னர் 1944ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி இரண்டாவது சதித் திட்டம் தீட்டப்பட்டது. இந்த சதித் திட்டத்தில் போஸ்லீகர் உள்பட 200 பேர் ஈடுபட்டனர்.
கிழக்கு பிரஷ்யாவில் உள்ள (இப்போதைய போலந்து) ஹிட்லரின் கிழக்குப் பிராந்திய தலைமையகத்தில் உள்ள, அவர் அவரும் டேபிளுக்குக் கீழே வெடிகுண்டு வைத்துக் கொல்ல தீர்மானித்தனர். அதன்படியே குண்டும் வைக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தில் போயஸ்லேகர்தான் வெடிபொருட்களை வாங்கி வந்து குண்டு தயாரிக்கும் பொறுப்பில் அமர்த்தப்பட்டார். ஹிட்லரைக் கொன்ற பின்னர் அவரது பிரசார பீரங்கியான கோயபல்ஸ் உள்ளிட்டோரைக் கைது செய்யவும் ஏற்பாடுகள் தயார் நிலையில் இருந்தன.
திட்டமிட்டபடி குண்டும் வெடித்தது. ஆனால் ஹிட்லர் சிறு காயத்துடன் உயிர் தப்பி விட்டார்.
இதனால் போயஸ்லேகர் பீதியடைந்தார். எப்படியும் தன்னை ஹிட்லர் பிடித்து கொன்று விடுவார் என பயந்தார். இதனால் சயனைட் விஷத்தை வாங்கி வைத்திருந்தார். ஒரு வேளை யாராவது தன்னைப் பிடிக்க வந்தால் தற்கொலை செய்து கொள்ளவே இந்த திட்டம். இருப்பினும் கடைசி வரை ஹிட்லரால், போஸ்லீகரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும் சயனைட் விஷத்தை ரொம்ப நாட்களுக்கு வைத்திருந்தாராம் போயஸ்லேகர்.
இந்தநிலையில் பெர்லின் நகரில் போயஸ்லேகர் நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 90. தற்போது போயஸ்லேகர் கதையை ஹாலிவட்டில் படமாக்கி வருகின்றனர். படத்தில் டாம் க்ரூஸ், வான் ஸ்டாபென்பர்க் என்ற கேரக்டரில் நடிக்கிறார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications