மானாமதுரையில் ஓவியக் கோயில் கட்டும் டென்மார்க் கலைஞர்!
மானாமதுரை: மானாமதுரை அருகே ஓவிய கோயில் கட்டி வருகிறார் டென்மார்க் கலைஞர் ஒருவர்.
டென்மார்க்கைச் சேர்ந்தவர் சாமுவேல். அந்நாட்டு அரசு மாளிகையில் ஓவியராக பணியாற்றியவர். தற்போது மானாமதுரை அருகே மேலகொன்னங்குளம் ரயில் நிலையம் அருகே வசித்து வருகிறார். அப்பகுதி மக்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு சொந்தக்காரர்.
இவர் கடந்த 1997ம் ஆண்டு இந்தியாவுக்கு சுற்றுலா வந்த சாமுவேல், பல பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு கடைசியாக தமிழகம் வந்தார்.
தமிழகத்துக்கு வந்த சாமுவேல் பல கோவில்களுக்கு சென்றார். தமிழக கோயில்கள் அவருக்குள் இருந்த கலை தாகத்தை தூண்டவே, தாய் நாட்டுக்கு செல்லவதை அடியோடு மறந்துவிட்டார். கடைசியாக மானாமதுரை வந்தவர் அங்கேயே தங்கிவிட்டார்.
கோயில் போன்ற அமைப்பில் ஒரு கட்டடத்தை கட்டி வருகிறார். இந்த கட்டடத்துக்கு ஓவியக் கோயில் என்று பெயர் வைத்துள்ளார். தற்போது முடியும் தருவாயில் உள்ள இந்த கட்டடத்தினுள் நிறைய ஓவியங்களை வரைந்து வருகிறார். விநாயகர், தென்னை மரங்கள் இவரது ஓவியத்தில் அதிகம் இடம் பிடித்துள்ளன.
அவரையும், ஓவியக் கோயிலின் அழகையும் அப்பகுதி மக்கள் வியந்து பார்க்கின்றனர்.
ஓவியங்கள்தான் எனது உயிர் மூச்சு. இங்கு உள்ள ஒவ்வொரு ஓவியத்திலும் எனது உயிரும், உணர்வும் கலந்துள்ளது. விரைவில் ஓவியக் கோவில் பணி நிறைவு பெறும். அப்போது மக்கள் பார்வைக்கு இன்னும் ஏராளமான ஓவியங்கள் கிடைக்கும் என்கிறார் சாமுவேல். கலைக்கும் கலைஞனுக்கும் தேசம் ஒரு எல்லையா என்ன..
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications