கின்னஸூக்கு 'கலைஞர் கவசம்'!
கின்னஸ் உலக சாதனைக்காக, தஷியின் இசையில் 108 இசை வடிவங்களில் 108 பாடகர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கணியத் தமிழ் நிறுவனத்தின் கலைஞர் கவசம் ஆடியோ சிடியை தமிழக முதல்வர் கலைஞரின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் இன்று அதிகாலை அவரது இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில் வெளியிட்டார்.
முதல்வர் கலைஞரின் 85வது பிறந்த நாளையொட்டி அவரது பெருமைகளை விளக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இசைத் தொகுப்பை 108 பாடகர்கள் பாடியுள்ளனர்.
இந்துஸ்தானி, கஸல், கர்நாடக சங்கீதம், மேலை நாட்டு இசை என பல வடிவங்களில் இந்தப் பாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஜெயகாந்தனின் உதவியாளர் திப்பு என்கிற சை.சா உசைன் எழுதியுள்ள இந்தப் பாடல் தொகுப்பு, உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெறுவதற்காக கின்னஸ் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
முதல்வர் கலைஞர் பிறந்த நாள் கொண்டாடிய செவ்வாய்க்கிழமை அதிகாலை, அவரது சிஐடி நகர் இல்லத்தில் முதல் சிடி வெளியிடப்பட்டது. முதல்வரின் துணைவியார் ராஜாத்தியம்மாள் சிடியை வெளியிட்டார்.
இசையமைப்பாளர் தஷி, பாலம் கல்யாணசுந்தரம், இயக்குநர் ஜெயபாரதி, மக்கள் தொடர்பாளர் ஜி.பாலன், கணியத் தமிழ் சாஃப்ட்வேர் அ.திவாகரன் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications