ஒலிம்பிக்கில் ஒலிக்கும் தமிழரின் இசை!

விளம்பரப் பட உலகின் முன்னணியில் உள்ள லேகா ரத்னகுமார் ஏசியா டுடே எனும் பெயரில் உருவாக்கிய 3 டிராக்குகளை தனது கூட்டு நிறுவனமான சொனோட்டான் மூலம் ஒலிம்பிக்கில் ஒலிக்க வைக்கப் போகிறார்.
ஆகஸ்ட் 8ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுத் திருவிழாவின் துவக்கநாள் மற்றும் இறுதி விழா ஆகிய முக்கிய நிகழ்ச்சிகளுக்கு மட்டுமல்லாது, போட்டி நடக்கும் 15 நாட்களிலும் விளையாட்டுப் போட்டிகளின் பின்னணியில் சிறப்பு இசை முழங்கிக் கொண்டே இருப்பதுபோல இம்முறை போட்டிகளை வடிவமைத்துள்ளனர்.
இதற்கான இசை டிராக்குகளை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு ஜெர்மனியைச் சேர்ந்த சொனோட்டன் நிறுவனம் வழங்கியுள்ளது. அப்படி வழங்கப்பட்டுள்ள டிராக்குகளில் மூன்று தமிழகத்தைச் சேர்ந்த லேகா ரத்னகுமார் உருவாக்கியது. இந்த மூன்று டிராக்குகள் தவிர 'ஃபோகஸ் ஆன் ஏசியா' எனும் பெயரில் இவர் மற்ற கலைஞர்களோடு சேர்ந்து உருவாக்கிய டிராக்கும் இடம் பெற்றுள்ளது.
இவா தவிர மேலும் ஏராளமான டிராக்குகளை ஒலிம்பிக் கமிட்டிக்கு வழங்கியுள்ளது சொனோட்டான்.
மேலும் இப்போட்டிகளை தொலைக்காட்சி மற்றும் வானொலியிலும் உலகம் முழுவதும் நேரடியாக ஒளி-ஒலிபரப்ப உள்ளனர். அதிலும் இந்த சொனோட்டான் இசைதான் ஒலிக்கப் போகிறது.
-
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
தங்கத்தை தாறுமாறாக வாங்கி குவிக்கும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள்.. சீனா செய்த பெரிய சம்பவம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி












Click it and Unblock the Notifications