கருணாநிதி பெயரில் பல்கலை.: கலைஞர் தமிழ்ப் பேரவை கோரிக்கை
திருநெல்வேலி: முதல்வர் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என, பாளையங்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற கலைஞர் தமிழ்ப் பேரவை தொடக்க விழா கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கலைஞர் தமிழ்ப் பேரவையின் திருநெல்வேலி மாவட்டக் கிளை தொடக்க விழா கூட்டம் மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் மு. ஜோதிமுருகன் தலைமையில் நடைபெற்றது. இதில், மாநில அமைப்பாளர் திருநாவுக்கரசு கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தமிழுக்காக தொடர்ந்து பணி செய்து வரும் முதல்வர் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும். பேரவைக்கு உறுப்பினர்களாக மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் பேரை சேர்க்க வேண்டும். திருக்குறளை தேசிய நூலாக மாற்றவும், தமிழை மத்திய ஆட்சி மொழியாக்கவும் மத்திய அரசு வலியுறுத்தி தமிழர்களை ஒன்று திரட்ட வேண்டும்.
அண்ணாவின் பிறந்த நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கவியரங்கம், கருத்தரங்கம், சிறப்புச் சொற்பொழிவு போன்றவற்றை நடத்த வேண்டும்.
துணை மேயர் கா. முத்துராமலிங்கம், மானூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் ஆ.க. மணி, வழக்கறிஞர் ரவீந்திரநாத், திருநெல்வேலி- தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை விற்பனைக் குழுத் தலைவர் கணேசன், பேரவையின் மாநிலச் செயலர் பி. சதீஷ், துணைச் செயலர் பி.எஸ். விஜயராகவன், மதுரை மாநகர் மாவட்ட அமைப்பாளர் மணி, மதுரை மாவட்டத் தலைவர் ராஜா உள்ளிட்டோர் பேசினர்.
--
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications