காமராஜர் பிறந்த நாள்: மாணவர்களுக்கு பேச்சு, ஓவியப் போட்டி!
Subscribe to Oneindia Tamil
வேலூர்: பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவ, மாணவியரிடையே கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன.
வேலூர் அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடந்த இப்போட்டிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆர். பிச்சை தொடங்கி வைத்தார்.
நான்காம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான 300 மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.
மாவட்ட கல்வி அலுவலர்கள் கலைமணி, சூரியநாதன் மற்றும் தொடக்கக் கல்வி அலுவலர் பொன்னம்மாள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
காமராஜரின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி மாணவ, மாணவியரிடையே பல்வேறு போட்டிகள் நடத்தி ஜூலை 15-ம் தேதி நடைபெறும் பிறந்த நாள் விழாவில் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.












Click it and Unblock the Notifications