அண்ணா பல்கலை. என்ஜினீயரிங் புத்தக கண்காட்சி
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் புத்தக கண்காட்சி தொடங்கியது. புதிய பாடத்திட்டத்துக்கேற்ப எழுதப்பட்ட புத்தகங்கள் இதில் கிடைக்கின்றன.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை நேற்று முன்தினம் தொடங்கியது. கண்காட்சியை துணைவேந்தர் பேராசிரியர் பி. மன்னர் ஜவகர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். பிறகு அவர் கண்காட்சியில் உள்ள புத்தகங்களை பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் சேகர், நூலக இயக்குனர் பேராசிரியர் கே.பாலு, வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கை இயக்குனர் பேராசிரியர் ஜெயவேல், நூலகர் பேராசிரியர் கிருஷ்ண மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கண்காட்சி சனிக்கிழமை மாலை வரை நடக்கிறது. காலை 10 முதல் மாலை 6.30 மணிவரை நடக்கிறது. இதில் 25 புத்தக விற்பனையாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
5 லட்சம் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. இவை அனைத்தும் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்கள் வாங்கி பயன் அடையலாம். என்ஜினீயரிங் மற்றும் அறிவியல் தொழில்நுட்ப புத்தகங்கள் ஆகும் அவற்றின் மொத்த மதிப்பு ரூ.5 கோடி.
தள்ளுபடி
அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள புதிய பாடத்திட்ட புத்தகங்கள் அனைத்தும் இந்த கண்காட்சியில் கிடைக்கின்றன. அனைத்து புத்தகங்களும் 20 சதவீத தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன.












Click it and Unblock the Notifications