தமிழில் பெயர் மாற்றம்: ஊழியர்களுக்கு ஏன் இவ்வளவு தமிழ் வெறுப்பு?

தமிழில் தங்கள் பெயரை மாற்றிக் கொள்பவர்களுக்கு அரசு அறிவித்துள்ள கட்டணச் சலுகை திட்டம் நடைமுறைக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் இதுவரை மக்களிடையே அதற்கு வரவேற்பு இல்லை. காரணம் பலருக்கு இதுகுறித்து எந்த விவரமும் தெரியாத அளவுக்கு படுரகசியமாகவே இத்திட்டம் வைக்கப்பட்டிருப்பதுதான்.
இது குறித்து, பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் அரசு அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றனர்.
பொதுமக்கள் தங்கள் பெயர், மதம் உள்ளிட்டவற்றை மாற்றி அவற்றை அரசிதழில் வெளியிடச் செய்ய ரூ. 415 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தமிழில் பெயர் மாற்றம் செய்து அதை அரசிதழில் வெளியிட கட்டணம் ரூ. 115 ஆகக் (தபால் கட்டணம் உட்பட) குறைக்கப்பட்டது. கடந்த 2006-ம் ஆண்டு ஆகஸ்ட் 3-ம் தேதி இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. அதே ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி அது நடைமுறைக்கு வந்தது.
ஊழியர்களின் அடாவடி!
பெயர் மாற்றம் செய்து அதை அரசிதழில் வெளியிடும் பணியை, எழுதுபொருள் அச்சுத்துறை ஆணையரகம் மேற்கொள்கிறது.
சென்னை அண்ணா சாலையில் ஹிக்கின் பாதம்ஸ் அருகே அச்சுத்துறை ஆணையரகம் செயல்பட்டு வருகிறது. தமிழில் பெயர் மாற்றினால் கட்டணச் சலுகை அளிக்கப்படும் என்ற அறிவிப்பை அங்கு எங்கு தேடினாலும் தெரியவில்லை. மேலும், விண்ணப் படிவம் விநியோகிக்கும் ஊழியர்களும் அதில் பெரிதாக அக்கறை காட்டுவதில்லை.
இந்தத் தடைகளையெல்லாம் தாண்டி உள்ளே வரும் நபர்களிடம், தமிழில் பெயர் மாற்றினால் அது தமிழகத்துக்குள்தான் செல்லுபடியாகும். அரசிதழைக் கொண்டு குடும்ப அட்டையில் மட்டுமே பெயரை மாற்றிக் கொள்ள முடியும். பள்ளிக்கூட மாற்றுச் சான்றிதழ் போன்றவற்றில் பயன்படுத்துவது கடினம். ஆங்கிலம் என்றால் பிரச்னை இருக்காது, என்று அங்கு பணிபுரியும் ஊழியர்களே கூறி திருப்பி அனுப்பி விடுகிறார்கள்.
அப்படியும் பிடிவாதமாக விண்ணப்பம் கேட்பவர்களிடம் ஏகப்பட்ட விதிமுறைகளைச் சொல்லி அதிருப்திக்குள்ளாக்கும் பணியைச் செவ்வனே செய்து வருகின்றனர் தமிழக அரசின் அச்சுத் துறை ஆணையரக ஊழியர்கள்.
வாழ்க தமிழ்!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications