குற்றாலத்தில் 11-ம் தேதி சாரல் விழா துவக்கம்
Subscribe to Oneindia Tamil
குற்றாலம்: இந்த ஆண்டுக்கான குற்றால சாரல் விழா வருகிற ஆகஸ்ட் 11-ம் தேதி துவங்குகிறது.
குற்றாலம் கலைவாணர் அரங்கில் ஒவ்வொரு ஆண்டும் சாரல் திருவிழா நடைபெற்று வருகிறது. அதை போல இந்த ஆண்டும் சாரல் திருவிழா வருகிற 10ம் தேதி துவங்கி 16ம் தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகிறது.
வருகிற 11ம் தேதி காலை 10.30 மணிக்கு இந்திய கலாச்சார ஆடை அலங்கார போட்டியும், 12ம் தேதி காலை 10.30 மணிக்கு நாய் கண்காட்சியும், 14ம் தேதி காலை 10.30 மணிக்கு ஆணழகன் போட்டியும் 15ம் தேதி காலை செஸ் போட்டியும் நடைபெற உள்ளன.
மாநில சுற்றுலாத்துறை இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.












Click it and Unblock the Notifications