சுற்றுலா தலமாகும் நெல்லையப்பர் கோயில்

இந்திய சுற்றுலா துறை சார்பில் தமிழகத்தில் சுற்றுலா தல அந்தஸ்த்தில் உள்ள பகுதிகளை பார்வையிட ஆசிய வளர்ச்சி வங்கி குழுவுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
இதை தொடர்ந்து டெல்லி ஆசிய வளர்ச்சி வங்கி குழுவின் திட்ட அலுவலர் மைக்கெல் கீரின் தலைமையில் உதவி திட்ட அலுவலர் குர்னித்ராய், முஸ்தபா அகமது ஆகியோர் கடந்த 27ம் தேதி நெல்லை மாவட்டத்தில் சுற்றுலா தல அந்தஸ்த்தில் உள்ள பாபநாசம், மணிமுத்தாறு, குற்றாலம் ஆகிய பகுதிகளை ஆய்வு செய்தார்.
இதைத் தொடர்ந்து நெல்லையப்பர் கோயிலில் சுவாமி, அம்மாள் சன்னதி மற்றும் சுற்று பிரகாரங்கள், ஆயிரங்கால் மண்டபம், டவுண் நயினார் குளம், நெல்லையப்பர் கோயில் வெளி தெப்பம், வஉசி மணிமண்டபம் ஆகியவற்றை பார்வையிட்டனர்.
இதுகுறித்து ஆசிய வளர்ச்சி வங்கி குழு திட்ட அலுவலர் மைக்கெல் கீரின் கூறுகையில், தமிழகத்தில் சுற்றுலா தல அந்தஸ்தில் உள்ள பல்வேறு பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டன.
நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், மணிமுத்தாறு, குற்றாலம், நெல்லையப்பர் கோயில் மண்டபம், வஉசி மணி மண்டபம், ஆகியவை பார்வையிடப்பட்டது.
இதில் நடைபெற உள்ள வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து திட்ட மதிப்பீடு தயாரித்து சுற்றுலா துறை மூலம் டெல்லி ஆசிய வளர்ச்சி வங்கிக்கு அனுப்பவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
நெல்லையப்பர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் ஒளி, ஒலி காட்சிகள் அமைக்கவும் அம்மையப்பர் விநாயகர் கோயிலில் கல் நடைபாதை அமைக்கவும், வசந்த மண்டபத்தில் நடைபாதை அமைக்கவும் திட்ட மதிப்பீடுகள் தயார் செய்து சுற்றுலா துறை மூலம் டெல்லிக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனை பரீசிலித்து திட்டத்திற்கான நிதி ஓதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications