துபாயில் 24ம் தேதி அண்ணா நூற்றாண்டு விழா
துபாய்: அண்ணா நூற்றாண்டு விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா அக்டோபர் 24ம் தேதி துபாயில் நடக்கிறது.
துபாய் அமீரகத் தமிழர்கள் அமைப்பின் செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை துபாய் அல் கிஸஸ் யும்மி இந்தியன் உணவகத்தில் தலைவர் அமுதரசன் தலைமையில் நடைபெற்றது.
அண்ணா நூற்றாண்டு விழா வரும் அக்டோபர் 24ம் தேதி இந்திய துணைத் தூதரக அரங்கில் நடத்தப்படும். இதில் சிறப்பு விருந்தினர்களாக எம்பி ஏ.கே.எஸ். விஜயன், திரைப்பட இயக்குநர் சீமான் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள்.
மேலும் அறிஞர் அண்ணா வாழ்க்கை வரலாற்றைத் தொகுத்து சேலம் வேலு நம்பி எழுதிய 'கடமை,கண்ணியம், கட்டுப்பாடு' எனும் நூல் வெளியீட்டு விழாவும் அன்றைய தினமே நடத்தப்படும். டாக்டர் பட்டம் பெற்ற சமூக சேவகர் அஜ்மான் மூர்த்தி இவ்விழாவில் கௌரவிக்கப்படுகிறார் என்று தீர்மானிக்கப்பட்டது.
மேலும் செப்டம்பர் 19ம் தேதி நோன்பு திறப்பு நிகழ்ச்சி கராமா சிவ் ஸ்டார் உணவகத்தில் நடைபெற இருக்கிறது. இதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று செயலாளர் சைபுதீன் கேட்டுக்கொண்டார்.
தொடர்புக்கு 055 697 3502


Click it and Unblock the Notifications
