6 அடி உயரம்.. 24 கிலோவில் தங்க வளையல்
நெல்லை: கின்னஸ் சாதனைக்காக 24 கிலோ எடையுள்ள தங்க வளையலை வடிவமைத்துள்ளது டாடா நிறுவனம். நெல்லையில் உள்ள அதன் ஷோரூமில் இந்த வளையல் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
டாடா நிறுவனம் தங்க நகை தயாரிப்பிலும் ஈடுபட்டள்ளது. இந்த நிறுவனத்தின் மூலம் 27 தங்க நகை ஷோரூம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 15 ஷோரூம்கள் அமைந்துள்ளன. இந்நிலையில் கின்னஸ் சாதனைக்காக டாடா நிறுவனம் சுத்தமான 22 காரட் தங்கத்தில் 24 கிலோ எடையில் 6 அடி உயரமுள்ள தங்க வளையலை டாடா நிறுவனம் வடிவமைத்துள்ளது.
ஆபரண கலைஞர்கள் பலர் 21 நாட்கள் தொடர்ந்து பணியாற்றி இந்த தங்க வளையலை வடிவமைத்துள்ளனர். இந்த தங்க வளையலின் மற்றொரு சிறப்பு அம்சம், அதில் தமிழ், ஆங்கிலம் உள்பட 8 மொழிகள் இடம் பெற்றுள்ளன.
நெல்லை டாடா கோல்டு பிளஸ் ஷோரூமில் இந்த தங்க வளையல் அறிமுக விழா மற்றும் கண்காட்சி நடைபெற்றது. தனியார் பள்ளி முதல்வர் புனிதா கண்காட்சியை தொடங்கி வைத்தார். டாடா நிறுவன முதுநிலை வணிக நிர்வாகி ராஜா, கார்த்திக் உள்பட பலர் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications