தமிழ்நல எழுத்தாளர் இலக்கிய சங்க கூட்டம்
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நல எழுத்தாளர் இலக்கிய சங்கத்தின் 48-வது கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் வை. சுப்பிரமணியன் தலைமை வகித்தார். புலவர் மு. சிவதாணு மொழி வாழ்த்து பாடினார். சி.பா. ஐயப்பன் வரவேற்றார்.
பொதுச் செயலர் ஆ பெருமாள், விஸ்வதிலகன் எஸ். கண்ணுபிள்ளை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வள்ளுவரும் சினந்தாரே என்ற தலைப்பில் தா. பகவதியப்பன் பேசினார். ஏ. சலீன் சிறப்புரையாளருக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
இல. பகவதிப்பெருமாள் நன்றி கூறினார்.












Click it and Unblock the Notifications