Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரம்ம முகூர்த்த திருமணங்கள்

Subscribe to Oneindia Tamil

Marriage
-இசக்கி ராஜன்

நெல்லையில் பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலை நேரத்தில் திருமணங்கள் நடப்பது பிரபலமாகி வருகிறது.

திருமணங்கள் சொக்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று நம் முன்னோர்கள் சொன்ன கூற்று பலருக்கு விளங்காமலேயே உள்ளது. ஆனால் சொர்க்கத்தில் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது என்பது விளையாட்டான கருத்தோ அல்லது தகவலோ இல்லை. இது முழுக்க முழுக்க உண்மையானதுதான்.

நம் பண்டைய கால திராவிட நாட்டில் முழுக்க முழுக்க இயற்கையை ஓட்டியே வாழ்க்கையினை நம் முன்னோர்கள் வாழ்ந்ததால்தான் அவர்கள் அதிகபட்சம் 110 வயது வரை வாழ்ந்துள்ளனர். ஆனால் இன்று நாம் இயற்கையை அழித்து வாழ்க்கையை நடத்தி வரும் அவசர உலகில் நடை போட்டுக் கொண்டிருக்கிறோம்.

அப்படி வேகமாக வாழ்க்கையை ஓட்டிவரும் இந்த கலியுகத்திலும் நம் முன்னோர்கள் விட்டுசென்ற பல நல்ல விஷயங்கள் இன்னும் தமிழகத்தின் பல கிராமங்களில் அழிக்கப்படாமல்...மறக்கப்படமால் மரபு வழியில் தொடர்கின்றன. அந்த மரபு வழி செயல்கள்தான் இன்று பெருநை நதிபாயும் திருநெல்வேலி சீமையில் வளம் கொழிக்கும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள தென்காசிக்கு அருகேயுள்ள 150க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

ஆமாங்க...என்ன குழப்பமாக இருக்கா.. நாம் சொல்ல வருவது பிரம்ம முகூர்த்தம் பற்றியது..பிரம்ம முகூர்த்தம்னா என்ன என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது.

அதிகாலை பொழுது வருவதற்கு முன் அதாவது நள்ளிரவு நேரம் என்பார்களே அந்த சமயம் தான் பிரம்ம முகூர்த்த நேரம். இந்த பொழுதில், படைக்கும் கடவுளான பிரம்மாவை தவிர மற்ற தெய்வங்கள் அனைத்தும் கண்ணயர்ந்து இருக்குமாம். இந்த சமயத்தில் திருமணம் செய்வது மிக..மிக பாக்கியம் என்று அன்றைய காலகட்டத்தில் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். அதனால்தான் இம்மாவட்டத்தில் பாவூர்சத்திரம், ஆலங்குளம், கீழப்பாவூர் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட கிராமங்களில் உழைப்பால் உயர்ந்து நிற்கும் நாடார் சமூக மக்கள் மத்தியில் இன்றும் நள்ளிரவு திருணம வைபோகங்கள் நடந்தேறி வருகின்றன.

இந்த பகுதியில் நடைபெறும் திருமணங்கள் அனைத்தும் இரவு பொழுதில்தான். பகலில் திருமணங்கள்தான் நம் நாட்டில் நடந்து வருகிறது. அதற்கு மாறாக இந்த வட்டார பகுதிகளில் இரவு நேர திருமணங்கள்தான் மிகவும் பிரசித்த பெற்றவையாகும்.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட தினத்தில் மாலை ஆறரை மணி முதல் ஊர் சாப்பாடு தொடங்கி இரவு 11 மணிக்குள் முடிந்து விடும். அதன்பின் மணமகன் உறவினர்கள் சார்பில் அலந்தரம் என்றழைக்கப்படும் நிகழ்ச்சி தொடங்குகிறது. இதில் மாப்பிள்ளை (மணமகன்) வழி உறவினர்கள் அனைவரும் மணமகனுக்கு அரசஇலை கொண்டு அவரை சுற்றி இரண்டாக கிழித்து போட்டு விட்டு வருவார்கள். அதன்பின் சுடச்சுட சுவையான கருப்பட்டி காபி, டீ வழங்கப்படுகிறது.

பின்னர் மணமகன் வீட்டில் உறவினர்கள் சார்பில் நடத்தப்பட்ட சடங்குகள் முடிந்து 12 மணிக்கு மணமகன் வீட்டில் சாமி கும்பிட்டு விட்டு உறவினர்கள் படை சூழ மணமகள் வீட்டுக்கு அழைத்து செல்லப்படுவார்.
அங்கு மணமகள் உறவினர்கள் மகமகளுக்கு அலந்தரம் செய்து முடித்து திருமணத்திற்கு தயாராக இருப்பார்கள். மாப்பிள்ளை (மணமகன்) வீட்டார் பெண்ணுக்குரிய பட்டு ஆடைகளை வழங்கிய பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு மணமகள் வீட்டில் அதிகாலை 3 1/2 முதல் 4 மணிக்குள் திருமணம் முடிந்து விடுகிறது.

அதன்பின்னர் மணமகளை அழைத்து கொண்டு மணமகன் வீட்டுக்கு அதிகாலை 5 மணிக்குள் திரும்பி விடுகின்றனர். அதன்பின்னர் மணமகன் சகோதரிகள் சூரிய உதயமாகும் பொழுதில் அந்த பகுதியில் உள்ள ஊர் பொது கிணற்றில் தண்ணீர் எடுக்க கூட்டி செல்லும் வைபோகமும் இன்றும் தொடர்கிறது.

அலந்தரம் செய்யும் வைபோகத்திற்கு சொக்கார அலந்தரம் என்று கூறப்படுகிறது. அதாவது மாப்பிள்ளை குடும்பத்தின் அனைத்து விதமான நிகழ்ச்சிகளுக்கும் முன் நிற்பவர்கள் இவர்கள்தான். நல்லதோ...கெட்டதோ இந்த அலந்தர சொக்காரர்கள்தான் முடிவு எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுறித்து அப்பகுதியினை சேர்ந்த ராஜாசிங் கூறுகையில், பிரம்ம முகூர்த்த நேரம் இன்னும் பல குடும்பங்களில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த அரிய பொழுதில் உலகமே அமைதியாக இருக்கும், நாம் வணங்கும் தெய்வங்கள் மட்டுமின்றி துஷ்ட தெய்வங்களும் கண்ணயர்ந்து கொண்டிருக்கும், ஆனால் பிரம்ம மகரிஷி மட்டுமே முழித்திருப்பார். அந்த சமயத்தில் திருமணம் நடந்தால் அவர்கள் வாழ்வு மங்களகரமாகவும், உயர்ந்ததாகவும் இருக்கும் என்பது வழி, வழியாய் கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு வழக்கம்.

மேலும் இதற்கு எங்கள் பகுதியில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே இது போன்ற திருமணங்கள் நடந்து வருகின்றன என்றார்.

ராஜேந்திரன் என்பவர் கூறியதாவது, முன்னோர்கள் இதனை இரண்டு விதமாக கூறுகிறார்கள். ஒன்று தெய்வ நம்பிக்கை காரணமாக என்றும் மற்றொன்று இப்பகுதி முழுக்க முழுக்க விவசாய பகுதி. பல நூறு ஆண்டுகளுக்கு முன் ஜமீன்தாரி முறை இருந்தபோது பகலெல்லாம் உழைக்கும் ஏழைகள் வறுமையோடு வாழ்ந்தவர்கள் தூங்கும் சமயத்திலாவது பசியாற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு தான் இரவு திருணமங்கள் நடைபெற தொடங்கியதாக பெரியவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் இப்பகுதியில் வசிக்கும் குறிப்பிட்ட சில சமூக மக்கள் மட்டுமே இரவு நேரங்களில் திருமணத்தை நடத்தும் வழக்கத்தினை இன்றும் தொடர்கின்றனர். 25 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த எங்கள் பகுதி பெண்கள் மஞ்சள் கயிறு திருமாங்கல்யத்தினை அணிந்தது கிடையாது. கருப்பு கயிற்றில்தான் திருமங்கல்யத்தினை போட்டவர்கள் ஏராளமானோர் வாழ்கின்றனர். அப்போதே சமூக சீர்திருத்தத்தினை இப்பகுதி மக்கள் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இரவு நேரங்களில் திருமணம் நடைபெறுவது பல்வேறு வகையில் மகிழ்ச்சியாக இருக்கிறது. காரணம் இன்றைய விலைவாசி உயர்வு தான்.
அதிக விவசாய தொழிலாளர்கள் இங்கு வசித்து வருகின்றனர். காலையில் செல்பவர்கள் இரவுதான் வீடு திரும்புவார்கள். அதனால் இந்த இரவு நேர திருமணம் நல்லதே என்று எங்கள் முன்னோர்கள் காட்டிய வழியில் இன்று நாங்களும் பின் தொடர்ந்து கொண்டிருக்கிறோம் என்றார்.

பிரம்ம முகூர்த்தம் நாடார் சமூக மக்கள் மட்டுமின்றி தாழ்த்தப்பட்ட சமூக மக்களிடமும் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இப்பகுதி மக்களின் அட்டகாசமான முன்னோர் காட்டிய வழியில் வாழ்க்கைய பயணத்தை தொடர்வதை எண்ணி உள்ளம் பூரிக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+