ரியல் எஸ்டேட் புரோக்கரின் சமூக சேவை

Subscribe to Oneindia Tamil

திருச்சி: காவிரி ஆற்றில் குளிக்கும் பொது மக்கள் ஆற்றின் சுழலில் சிக்கி கொள்ளாமல் இருக்க விழிப்புணர்வு போர்டு ஒன்றை வைத்துள்ளார் காஜா என்ற ரியல் எஸ்டேட் புரோக்கர்.

கரூர் - திருச்சி சாலையில் உள்ளது முத்தரசநல்லூர். இங்குள்ள ரயில் நிலையம் அருகில் காவிரி நதி செல்கிறது.

இந்த நதியி்ல் தான் முத்தரசநல்லூர் மக்களும், அருகில் உள்ள குக்கிராம மக்களும் குளிப்பது வழக்கம். அதே போன்று தொலை தூர பயணத்தில் செல்பவர்கள் இந்த இடத்தில் வாகனத்தை நிறுத்தி வாகனத்தின் ரேடியேட்டருக்கு தண்ணீர் ஊற்றுவதும், இளைப்பாருவதும் வாடிக்கை.

ஆனால் இந்த இடத்தில் குளிக்கும் பகுதியில் சுழல் ஒன்று உள்ளது. இது தெரியால் அந்த பகுதியில் குளிக்கும் மக்கள் சிலர் அந்த சுழலில் சிக்கி மரணத்தின் விளிம்பிற்கே சென்று மீண்டுள்ளனர்.

இதனால் இந்த பகுதியைச் சேர்ந்த காஜா என்பவர் இங்கு சுழல் உள்ளது பார்த்து குளிக்கவும் என்று ஒரு போர்டு வைத்துள்ளார். இவர் ரியல் எஸ்டேட் புரோக்கர் ஆவார்.

இவர் வைத்துள்ள போர்டைப் பார்த்து விட்டு, குளிக்க வரும் பொது மக்கள் உஷாராகி ஆபத்தில் இருந்து தப்பித்துக் கொள்கின்றனர்.

பொது மக்களுக்கு அரசு செய்ய வேண்டிய ஒரு நல்ல காரியத்தை ஒரு தனி மனிதர் எந்த வித பிரதிபலனும் பாராமல் செய்துள்ள செயல் வரவேற்கதக்க ஒன்றாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+