மங்கலம் அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
திருப்பூரை அடுத்த மங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் பேரவை சார்பில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பி.நடராஜன் தலைமை தாங்கினார். பள்ளிக் கட்டடக் குழுத் தலைவர் பழனிச்சாமி, தலைமை ஆசிரியர் சரவணபவன், திருப்பூர் ஒன்றியக் குழு உறுப்பினர் முத்துராமலிங்கம், முன்னாள் தலைமை ஆசிரியர் ஆர்.கோபால், ஊராட்சித் தலைவர்கள் பாலாமணி, செட்டி காளியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மும்பை, சென்னை, சேலம், மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்தும் இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் 300-க்கும் மேற்பட்டோர் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர். பள்ளியில் பணியாற்றிய முன்னாள் ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களும் தங்களது பேரன், பேத்திகளுடன் பங்கேற்றனர்.
விழாவில் பங்கேற்ற சேலம் பொறியாளர் பாஸ்கரன், பள்ளியின் வளர்ச்சிக்காக ரூ.25 ஆயிரத்தை நன்கொடையாக வழங்கினார். பல்வேறு முன்னாள் மாணவர்களும், ஆசிரியர்களும் நன்கொடை அளித்தனர். ஏற்பாடுகளை முன்னாள் மாணவர் பேரவை தலைவர் விநாயகம், ஒருங்கிணைப்பாளர் கணேசன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications