மத வெறியை துடைத்தெறிவோம் - குன்றக்குடி அடிகளார்

திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத நல்லிணக்க மாநாட்டு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு குன்றக்குடி அடிகளார் பேசியதாவது:
மனித நேயத்தை தேடும் பணியைத் தனது கட்சியின் லட்சியமாக, சேவையாக எடுத்துச் செயல்பட்டு வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இப்படியொரு மாநாட்டை நடத்துவதை நான் மனதாரப் பாராட்டுகிறேன்.
தொழிலாளர் உரிமைக் காக போராடிக் கொண்டிருக்கிற வேளையில் மனித உரிமைகளுக்காகவும் மார்க்சிஸ்ட் கட்சி தனது போராட்டத்தைத் துவக்கியிருப்பது வரவேற்கத்தக்கது.
பூட்டு என்று ஒன்று இருந்தால், அதனைத் திறக்க சாவி அவசியம். அது போல மதம் என்ற ஒன்று இருந்தால் அதற்கு மனித நேயம் அவசியம். பூட்டுக்கு சாவி எப்படி முக்கியமோ அதுபோல மதத்திற்கு மனித நேயம் முக்கியம்.
எல்லா மதங்களும் ஒரே பாதையில் தான் பயணிக்கின்றன.
வார்த்தைகளில், போதனைகளில் முரண்பாடு உள்ளது.தற்போது நடைபெற்றுள்ள மும்பை தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இனி இந்த மண்ணில் மத வெறி துடைத்து எறியப்பட வேண்டும் என்றார் அவர்.


Click it and Unblock the Notifications
