சாரா பாலினின் மணமாகாத மகளுக்கு குழந்தை!

சாரா பாலினின் 18 வயது மகள் பிரிஸ்டல். இவர் கர்ப்பமாக இருந்து வந்தார். இந்த நிலையில், அவருக்கு ஞாயிற்றுக்கிழமை அலாஸ்காவின், பால்மர் நகரில் ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தைக்கு டிரிப் ஈஸ்டன் மிட்சன் ஜான்சன் என பெயரிட்டுள்ளனராம். இந்தத் தகவலை சாரா பாலினின் உறவினரான காலின் ஜோன்ஸ் வெளியிட்டுள்ளார்.
தாயும், சேயும் நலமாக இருப்பதாக ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இதுகுறித்து சாரா பாலின் தரப்பில் எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
விசேஷம் என்னவென்றால் பிரிஸ்டலுக்கு இன்னும் திருமணமாகவில்லை. தனது பள்ளிக்கூட நண்பரான லெவி ஜான்ஸ்டனை அவர் காதலித்து வருகிறார். கல்யாணம் செய்து கொள்ளவும் முடிவு செய்துள்ளார்.
சாரா பாலின் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது, தனது மகள் கர்ப்பமாக இருப்பதை சாரா பாலின் வெளிப்படையாக அறிவித்தார். இதை மீடியாக்கள் ஒரு பிரச்சினையாக கிளப்பின. இருப்பினும் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட பாரக் ஓபாமா, சாரா பாலின் குடும்பத்தின் தனிப்பட்ட வாழ்க்கையை தான் மதிப்பதாகவும், இதை தான் பெரிதுபடுத்த விரும்பவில்லை என்றும் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
பிரிஸ்டலின் வருங்கால மாமியாரான ஷெர்ரி, போதை வழக்கு ஒன்றில் இந்த மாதம் கைது செய்யப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications