2008ன் முக்கிய சம்பவங்கள்!

இந்தியா, இந்தியர்கள் என்ற பதத்திற்கே பெரும் ஆப்பு வைத்தார் ராஜ் தாக்கரே இந்த ஆண்டு.
மும்பை மராத்தியர்களுக்கே, இங்கு ஒரு வட இந்தியரும் இருக்கக் கூடாது என்ற வெறி முழக்கத்தோடு, பிப்ரவரி 4ம் தேதி ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா கட்சியினர் வன்முறையில் குதித்து மும்பையை ரத்தக்களறியாக்கினர்.
அப்பாவி வட இந்தியர்களை விரட்டி விரட்டித் தாக்கினர். பழ வியாபாரிகள், சாலையோர வியாபாரிகள், ராஜ் தாக்கரே கட்சியினரின் வெறிக்கு இலக்காகினர்.
ஆயிரக்கணக்கான வட இந்தியர்கள் மும்பையை விட்டு தங்களது சொந்த மாநிலங்களுக்கு கிளம்பினர்.
நடிகர் அமிதாப் பச்சனின் வீடும் தாக்கப்பட்டது.
ராஜ் தாக்கரேவின் இந்த அட்டூழியத்திற்கு எதிராக வட இந்திய அரசியல் தலைவர்கள் திரண்டனர்.
சாதாரண தெருச் சண்டையில் ஈடுபட்டாலே கைது செய்யும் போலீஸார், ராஜ் தாக்கரே விஷயத்தில் படா அமைதி காத்தனர். சரத்பவார் உள்ளிட்டோர் மண்ணின் மைந்தரான தாக்கரேவைக் காக்க முயன்றனர்.
ஆனால் எதிர்ப்புகள் வலுத்ததால் ஒரு வழியாக 13ம் தேதி கைது செய்யப்பட்டார் ராஜ் தாக்கரே. ஆனால் உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டு விட்டார்.
இப்போதைக்கு கலவரம் அடங்கியுள்ள நிலையிலும், இன்னும் நீரு பூத்த நெருப்பாக வட இந்தியர்களுக்கு எதிரான துவேஷம் மும்பையில் இருந்து கொண்டுதான் உள்ளது.
அதை நிரூபிக்கும் விதமாக, மும்பை தீவிரவாதத் தாக்குதலில் எத்தனையோ பேர் இறந்த நிலையில் உயிரிழந்த மராத்திய காவல்துறையினருக்கு தான் அஞ்சலி செலுத்துவதாக இன வெறியுடன் பேசினார் ராஜ் தாக்கரே.
-
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications