2008ன் முக்கிய சம்பவங்கள்!
Subscribe to Oneindia Tamil

தமிழர்களின் வீர விளையாட்டோடு சட்டம் சீ்ண்டிப் பார்த்த ஆண்டு இது.
பொங்கல் பண்டிகையின்போது தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நடைபெறும் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து தென் மாவட்ட மக்களுக்கு கசப்பு பொங்கலைக் கொடுத்த ஆண்டு இது.
ஜல்லிக்கட்டு நடத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் அதிர்ச்சி அடைந்த அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பகுதி மக்கள் துக்க பொங்கல் அனுஷ்டித்தனர். மேலும், உண்ணாவிரதப் போராட்டத்திலும் குதித்தனர்.
தமிழக அரசும், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரும் எடுத்த கடும் முயற்சிகளின் விளைவாக சில நிபந்தனைகளின் அடிப்படையில், ஜல்லிக்கட்டை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.
உற்சாகத்தோடு பொங்கலைக் கொண்டாடி முடித்தனர் தென் மாவட்ட மக்கள்.












Click it and Unblock the Notifications