சென்னை சங்கமம் துவங்கியது

திருவிழா நம்ம தெரு விழா என்ற வாசகத்துடன் 2வது முறையாக சென்னையை கலகலப்பாக்க துவங்கியது சென்னை சங்கமம் கலை விழா.
முதல்வரின் மகள் கனிமொழியின் முயற்சியாலும், தமிழ் மையத்தின் உதவியாலும், கடந்த ஆண்டு சென்னை சங்கமம் என்ற கலை, பண்பாட்டு விழா சென்னையில் ஒரு வார காலம் நடந்தது.
தமிழகம் முழுவதும் பரவிக் கிடக்கும் பல்வேறு கலை, கலாச்சார நிகழ்ச்சிகளை சென்னை நகர மக்களுக்கு அறியப்படுத்தும் வகையில் உருவானதுதான் இந்த சென்னை சங்கமம்.
இந்த நிகழ்ச்சிக்கு சென்னை மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் பொங்கல் திருநாளையொட்டி இந்த ஆண்டுக்கான சென்னை சங்கமம் நிகழ்ச்சி 10ம் தேதி துவங்கியது. முதல்வர் கருணாநிதி இதை தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து சென்னை சங்கமம் ஒருங்கிணைப்பாளர் கனிமொழி எம்.பி. செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழ் மையம் மற்றும் தமிழக அரசின் சுற்றுலா, கலாச்சார துறையுடன் இணைந்து இந்த நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.
இந்த ஆண்டு புதிதாக பாரம்பரிய உணவையும் சேர்த்துள்ளோம். பல வகையான உணவுகளை பாரம்பரியமாகத் தயாரித்து வழங்கும் கலைஞர்கள் இதில் பங்கேற்கிறார்கள்.
தொடக்கவிழாவில் குழந்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கவிஞர்கள் அறிவுமதி, கபிலன் ஆகியோர் பாடல் எழுத பால் ஜோசப் இசையமைத்துள்ள ஞாயிறு போற்றுதும் என்ற இசை, நடன நிகழ்வு நடத்தப்படுகிறது.
குழந்தைகளின் பார்வையில் இயற்கை, சுற்றுச் சூழல் என்ற வகையில் இருக்கும் இந்த நிகழ்ச்சி ஒன்றரை மணி நேரம் நடக்கும். கடந்த வருடம் 600 கலைஞர்கள் தான் பங்கேற்றனர். ஆனால் இந்த வருடம் 1,500 கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.
எங்களால் பயிற்றுவிக்கப்பட்ட பள்ளி மாணவர்களும் பங்கேற்கிறார்கள். கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள் இந்த விழாவில் கலந்து கொள்கிறார்கள்.
நிறைவு நாளன்று பெசன்ட் நகரில் சென்னை சங்கமத்தில் பங்கேற்ற கலைஞர்களின் அணிவகுப்பு நடத்தப்படுகிறது. நாட்டுப்புற கலைஞர்களுக்கு 1 மணி நேரத்தில் அவர்களின் கலை வடிவங்களை நிகழ்த்திக் காட்டுவது எப்படி. கிடைத்த ஊதியத்தை சேமிப்பது எப்படி போன்ற பயிற்சிகள் அளித்துள்ளோம்.
கவிஞர்கள் சந்திப்பு, பட்டிமன்றம், இலக்கிய விவாதங்கள் உள்ளிட்டவை தமிழ் சங்கமம் என்ற தலைப்பில் நடைபெறும்.
நாட்டுப்புறக் கலைகளுக்கான ஒரு நிறுவனத்தை அமைக்க வேண்டும் என்பது எங்கள் ஆசை. அதற்கு எவ்வளவு காலம் ஆகும் எனத் தெரியவில்லை என்றார் கனிமொழி.
இந்த ஆண்டு சென்னை சங்கமம் திருவிழாவை நேரடியாக இணையதளத்தில் பார்ப்பதற்கு www.anytimechennai.com என்ற இணையதளமும் உருவாக்கப்பட்டுள்ளது
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications