நல்லகண்ணுவுக்கு அம்பேத்கர் விருது

Subscribe to Oneindia Tamil

Nallakannu
சென்னை: தமிழக அரசின் 2007ம் ஆண்டுக்கான டாக்டர் அம்பேத்கர் விருது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தமிழ் மாநிலச் செயலாளரும், மத்திய நிர்வாகக் குழு உறுப்பினருமான நல்லகண்ணுவுக்குக் கிடைத்துள்ளது.

2007ம் ஆண்டுக்கான தமிழக அரசின் திருவள்ளுவர், பெரியார், அண்ணா உள்ளிட்ட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. டாக்டர் அம்பேத்கர் விருதுக்குரியவரை தேர்வு செய்வது தொடர்பான உயர் மட்டக் குழுவின் கூட்டம் முதல்வர் கருணாநிதி தலைமையில், ஜனவரி 9ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி முதல்வர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று உயர் மட்டக் குழுக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் விருதினை, நல்லகண்ணுவுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டது.

வருகிற 16ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் விருதுகளை முதல்வர் கருணாநிதி விருது பெற தேர்வானவர்களுக்கு வழங்குகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+