Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெங்களூர் திருவள்ளுவர் சிலை-கருணாநிதி கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

Valluvar statue in Bangalore
டெல்லி: டெல்லி தமிழ்ச் சங்கத்தில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை முதல்வர் கருணாநிதி நேற்று திறந்து வைத்தார்.

ஆர்.கே.புரத்தில் கழிப்பறைகளின் நடுவே கவனிப்பாரின்றி இருந்த இந்த திருவள்ளுவர் சிலையை, டெல்லி தமிழ்ச் சங்கம் மீட்டு தங்கள் வளாகத்தில் நிறுவியது.

இதை, முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். டெல்லி முதல்வர் ஷீலா தீட்சி்த், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் பங்கேற்ற இந்த விழாவில் கருணாநிதிக்கு 'செம்மொழிச் செம்மல்' என்ற விருதையும் தமிழ்ச் சங்கம் வழங்கியது.

இதை ஏற்றுப் பேசிய கருணாநிதி,

பெங்களூரிலே தமிழ்ச் சங்கத்தின் வாசலில் திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டு இருபதாண்டு காலத்திற்கு மேல் ஆகிறது. ஷீலா தீட்சித் போன்ற நல்ல முதல்வர்கள் கர்நாடகாவில் வந்தால் தான், அந்த வள்ளுவர் சிலைக்கு ஒரு விமோசனம் பிறக்கும்.

அந்தச் சிலையைத் திறந்தால் கலவரம் வரும், திறக்க முடியாது என்று ஒருசாரார் இன்னமும் கூச்சல் போட்டுக் கொண்டிருக்கிறார்கள், இன்னமும் கலவரத்திலே ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். நம்மை வழி நடத்திய வள்ளுவர் பெருந்தகை உலகம் முழுவதும் உள்ள பெரும் புலவர்களால் பலமொழி வல்லுநர்களால் மொழி பெயர்க்கப்பட்ட நூலுக்குச் சொந்தக்காரர், அறிவுலக மேதை, ஒப்பற்ற ஞானி.

அவருடைய சிலை பெங்களூரில் தமிழ் சங்கத்தின் வாயிற்புறத்தில் மூடப்பட்ட நிலையில் துணி சுற்றப்பட்ட நிலையில் அனாதையாக நின்று கொண்டிருக்கிறது. இருபதாண்டு காலமாக பெங்களூரிலே எந்த விழாவிற்கு என்னுடைய கட்சி சார்பிலே உள்ளவர்களே அழைத்தாலும் கூட நான் அங்கே சூளுரைத்திருக்கிறேன்.

இந்தச் சிலை இங்கே திறந்து வைக்கப்படுகிற வரையில் நான் பெங்களூருக்கு வந்து எந்த விழாவிலும் கலந்து கொள்ள மாட்டேன் என்று சூளுரைத்திருக்கிறேன். இது பெங்களூரிலே இருக்கின்ற அரசுகளுக்கும் தெரியும். மத்திய அரசுக்கும் தெரியும். நம்முடைய அருமை நண்பர் சிதம்பரம் அவர்களிடமும் சொல்லியிருக்கிறேன்.

நண்பர் சிதம்பரம் இந்த உணர்வைப் புரிந்து கொள்ளாதவர் அல்ல. எனவே உள்துறை அமைச்சரின் முதல் பணியாக வேறு எந்தப் பணி இருந்தாலும், அவைகளையும் பார்க்கட்டும். முதல் பணியிலே முதலாவதுப் பணி பெங்களூர் தமிழ்ச் சங்கத்து வாயிலிலே நிற்கின்ற திருவள்ளுவருடைய சிலையை திறந்து வைப்பது தான்.

திறந்து வைக்காவிட்டாலும் பரவாயில்லை, அந்த அழுக்குத் துணியை அகற்றினால் போதும். என் அய்யன் வள்ளுவருடைய சிறப்பை அவருடைய சிரிப்பை உலகம் உணர்ந்து கொள்ள அந்தப் பெருமையை உருவாக்க வேண்டும்.

இதை நான் நாடு தழுவிய அளவிலே அல்ல, நட்பு தழுவிய அளவிலே நான் தமிழ் மீது கொண்டிருக்கின்ற காதலின் அளவிலே நான் தமிழ் நெஞ்சங்களின்பால் வைத்திருக்கிற பாசத்தின் அளவிலே, அன்பிலே அளவிலே, யாரிடம் சொன்னால், மறக்காமல் நடக்குமோ அப்படிப்பட்ட நண்பரிடத்தில் அவர் இந்தியாவிலே இன்றைக்கு உள்துறை மந்திரி மக்களைப் பாதுகாக்கும் மந்திரி. நீங்கள் தமிழர்களுடைய நாகரீகத்தை, வள்ளுவருக்கு ஏற்பட்ட அந்த அப கீர்த்தியை துடைப்பதற்கு அதைப் பாதுகாத்திடுங்கள் என்று இந்த விழாவிலே நான் கோரிக்கையாக வைத்து வள்ளுவரை வாழ விடுங்கள் பெங்களூரில் என்று நம்முடைய உள்துறை மந்திரியை கேட்டுக் கொள்கிறேன்.

சிதம்பரம் அந்தப் பணியினை திறம்படச் செய்து தமிழ் மக்களின் பாராட்டுக்களைப் பெற வேண்டும். அப்படி பாராட்டுகிற முதல் ஆளாக நான் இருப்பேன்.

தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்ததற்கு மத்திய அரசைத் தான் பாராட்ட வேண்டும். இதற்காக தமிழகத்தைச் சேர்ந்த பல மத்திய அமைச்சர்களும் முயற்சி எடுத்தனர் என்றார் கருணாநிதி.

விழாவில் மத்திய அமைச்சர் பாலு, வைரமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அந்த விழாவில் தமிழ்ச் சங்கத்தில் கட்டப்படவுள்ள முத்தமிழ் தோரண வாயிலுக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+