அஜ்மானில் முப்பெரும் விழா
துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அஜ்மானில் தமிழ்நாடு பண்பாட்டுக் கழகம் மற்றும் அஜ்மான் அமீரக தமிழர்கள் அமைப்பு ஆகியவை இணைந்து முப்பெரும் விழாவை நடத்தவுள்ளன.
அஜ்மானில் ஷார்ஜா தமிழ்நாடு பண்பாட்டுக் கழகம் மற்றும் அஜ்மான் அமீரக தமிழர்கள் அமைப்பு ஆகியவை இணைந்து முப்பெரும் விழாவை நாளை (25ம் தேதி) மாலை 4.30 மணிக்கு அஜ்மான் ஜுவல் பேலஸில் நடத்த இருக்கின்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் பேராசிரியர் புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி ஆகியோரின் நாட்டுப்புற பாடல்களும், கரகாட்டத்தில் தேசிய விருதுபெற்ற சுரேஷின் கரகாட்ட நிகழ்ச்சியும், சிம்பொனி மியூசிக் இன்ஸ்டிடியூட் குழுவின் கலாச்சார நிகழ்ச்சி உட்பட சிலம்பாட்டம், கோலாட்டம் மற்றும் ஒயிலாட்டம் நடைபெற உள்ளது.
உலக நட்புறவுக் கழகத்தின் சிறந்த சாதனையாளர் விருதும் இவ்விழாவில் வழங்கப்பட உள்ளது. குழந்தைகளின் கலை நிகழ்ச்சி இன்னும் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற உள்ளது.
சிறப்பு விருந்தினர்களாக அஜ்மான் ராயல் கோர்ட்டின் தலைவர் ஷேக் மஜீன் பின் சயீத் அல் நுயமி, அஜ்மான் குடியுரிமைத்துறை உதவி இயக்குநர் முஹம்மத் அப்துல்லாஹ் அல்வான், அஜ்மான் உயர்நீதிமன்றத்தின் சுல்தான் ரஷீத் அல் மத்ரூஸி, அஜ்மான் பின் பகீத் குரூப் தலைவர் சுல்தான் அப்துல்லாஹ் ரஷீத் அல் மத்ரூஸி,
சென்னை உலக நட்புறவுக் கழகத் தலைவர் டாக்டர் ஜி. மணிலால், முன்னாள் சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் டி.என். வள்ளிநாயகம், கும்பகோணம் அன்பு மருத்துவமனை நிறுவனர் கே. அன்பழகன், மலேசியாவின் டாக்டர் சுல்தான் அப்துல் காதர், பெங்களூர் தமிழ் சமூக மற்றும் கலாச்சார அகடமி தலைவர் டாக்டர் அருணாச்சலம், சென்னை டாக்டர் எஸ்.எம். சுந்தரம்,
சென்னை டவுன் லயன் கிளப் தலைவர் டாக்டர் பி. தங்கராஜ், சென்னை ஆர்.எம்.பி. இன்போடெக் நிறுவனத்தின் வி.பாபு தாமஸ், அஜ்மான் இந்திய சங்க பொதுச் செயலாளர் அஹமது கான் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.
சன் டிவி காமெடி டைம் புகழ் அர்ச்சனா நிகழ்ச்சியினை தொகுத்து வழங்குகிறார்.
நிகழ்ச்சிக்கான அணுசரணையினை துபாய் சிவ் ஸ்டார் பவன் குரூப், அஜ்மான் பிக் பகித் குரூப், ஷார்ஜா சபையர் குரூப் மற்றும் ஸ்டார் பிரிண்டிங் பிரஸ் ஆகியவை வழங்கியுள்ளன.
இலவச அனுமதி அழைப்புகள் சிவ் ஸ்டார் பவன், பிக் பகித் எக்ஜேன்ச் அஜ்மான், சபையர் ரெஸ்டாரெண்ட் ஷார்ஜா ஆகிய இடங்களில் இடைக்கும். அழைப்பு உள்ளவர்கள் மட்டுமே நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்படுவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications