புஷ் நியமித்த சமையல்காரரே தொடர ஓபாமா சம்மதம்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷால் நியமிக்கப்பட்ட வெள்ளை மாளிகை சமையல்காரரே தொடர்ந்து அப்பொறுப்பி்ல் நீடிக்கலாம் என அதிபர் பதவியேற்கவுள்ள பாரக் ஓபாமா ஒப்புதல் அளித்துள்ளார்.
அமெரிக்க வெள்ளை மாளிகையின் தலைமை சமையல்காரராக கிறிஸ்டிடா கோமர்போர்ட் என்ற பெண்மணி இருக்கிறார். வெள்ளை மாளிகை சமையல்காரர் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி இவர்தான். புஷ் பதவிக்காலத்தில் இவர் இப்பொறுப்பில் அமர்த்தப்பட்டார்.
புஷ்ஷின் மனைவி லாரா புஷ்தான், கிறிஸ்டிடாவை செலக்ட் செய்தவர் ஆவார். 2005ம் ஆண்டு வெள்ளை மாளிகை சமையல்காரர் பொறுப்புக்கு வந்தார் கிறிஸ்டிடா.
இந்த நிலையில் இவரே தொடர்ந்து சமையல்காரர் பொறுப்பில் நீடிக்கலாம் என பாரக் ஓபாமா சம்மதம் தெரிவித்துள்ளாராம்.
இதுகுறித்து ஓபாமாவின் மனைவி மிசேல் ஓபாமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வெள்ளை மாளிகையின் சமையல் நிர்வாகத்தில் தனது திறமையை நிரூபித்தவர் கிறிஸ்டிடா கோமர்போர்ட். புஷ் குடும்பத்தினரின் அபிமானத்தையும் பெற்றுள்ளார்.
அருமையான ஒரு மகளைக் கொண்டவரான கிறிஸ்டிடா எங்களது குடும்பத்தினர் மீதும் பாசத்துடனும், அக்கறையுடனும் உள்ளார். எனவே அவரை தொடர்ந்து சமையல் தலைமைப் பொறுப்பில் நீடிக்க முடிவு செய்துள்ளோம்.
அவருடன் இணைந்து பணியாற்றப் போகும் நான்கு ஆண்டுகளையும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன் என்று கூறியுள்ளார் மிசேல்.
விநாடிகளில் தீர்ந்த பதவியேற்பு விழா டிக்கெட்:
இதற்கிடையே ஓபாமா பதவியேற்பு விழாவுக்கான டிக்கெட்கள் 60 விநாடிகளில் விற்றுத் தீர்ந்து விட்டனவாம்.
ஜனவரி 20ம் தேதியன்று பாரக் ஓபாமாவின் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. பதவியேற்பு விழாவையொட்டி அணிவகுப்பு மரியாதை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். உலகப் பிரசித்தி பெற்றவை இவை.
இதைப் பொதுமக்கள் பெரும் திரளாக கூடி பார்வையிடுவார்கள். அதேசமயம் டிக்கெட் விற்பனையும் உண்டு. இந்த டிக்கெட்டை வாங்கினால், மிக மிக அருகாமையில் இருந்து அணிவகுப்பு, பதவியேற்பு உள்ளிட்டவற்றை வசதியாக உட்கார்ந்து பார்க்க முடியும்.
மொத்தம் 5000 டிக்கெட்கள் இதற்காக அச்சிடப்பட்டிருந்தது.
இந்த டிக்கெட் விற்பனை தொடங்கிய 60 விநாடிகளில் அனைத்து டிக்கெட்களும் விற்றுத் தீர்ந்து விட்டனவாம்.
அதை விட வேடிக்கையாக, வாங்கப்பட்ட இந்த டிக்கெட்களை இ-பே உள்ளிட்ட சில இணையதளங்கள் மூலம் மறு விற்பனைக்கு விட்டுள்ளனர் அதை வாங்கியவர்கள். அதுவும் அதிக விலைக்கு.
அதிபர் பதவியேற்பு விழாக் கமிட்டி ஒரு டிக்கெட்டுக்கு 25 டாலர் என கட்டணம் நிர்ணயித்து விற்றது. ஆனால் அதை விட பல மடங்கு விலை வைத்து ஆன்லைன் மூலம் மறுவிற்பனைக்கு விட்டுள்ளனராம்.
ஓபாமா பதவியேற்பு விழாவைக் காண 10 லட்சம் பேராவது வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறதாம்.
-
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications