சந்த்ராயன் திட்ட இயக்குநர் அண்ணாதுரைக்கு கெளரவ டாக்டர் பட்டம்

150வது ஆண்டை கொண்டாடி வரும் சென்னை பல்கலைக்கழகம், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதல்வர் கருணாநிதி ஆகியோருக்கு கடந்த ஆண்டு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது.
இந்த ஆண்டு, இந்திய விண்கலம் சந்திரனில் காலடி பதிக்க மூலகாரணமாக இருந்த சந்த்ரயான்-1 திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை, எலும்புமுறிவு டாக்டர் மயில்வாகனன் நடராஜன் ஆகியோருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க சென்னை பல்கலைக்கழகம் முடிவு செய்தது.
துணைவேந்தர் எஸ்.ராமச்சந்திரன் தலைமையில் நேற்று நடந்த சிறப்பு செனட் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் பெறப்பட்டது.
வருகிற 19ம் தேதி நடைபெறும் சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அண்ணாதுரை, டாக்டர் மயில்வாகனன் நடராஜன் ஆகியோருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.
பல்கலைக்கழக வேந்தரும், தமிழக கவர்னருமான சுர்ஜீத் சிங் பர்னாலா தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் உத்தரப் பிரதேச கவர்னர் டி.வி.ராஜேஸ்வர் கலந்துகொள்கிறார்.
பட்டமளிப்பு விழாவில் 50 ஆயிரம் மாணவ-மாணவிகள் பட்டம் பெறுகிறார்கள். பல்கலைக்கழக அளவில் ரேங்க் பெற்ற 180 பேருக்கு தங்கப் பதக்கம் வழங்கப்படுகிறது. ஆராய்ச்சி பணிக்காக 300 பேர் பி.எச்டி. பட்டம் பெறுகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications