அரவாணிகள் தத்தெடுப்பு விழா
சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் வட்டார கிராமிய கலைஞர்கள் முன்னேற்ற சங்க சார்பில் அரவாணிகள் தத்தெடுப்பு விழா நடந்தது.
சங்கரன்கோவில் பாரதியார் தெருவில் உள்ள அனைத்து வட்டார கிராமிய கலைஞர்கள் முன்னேற்ற சங்க அலுவலகத்தில் அரவாணிகள் தத்தெடுப்பு விழா நடந்தது.
விழாவிற்கு சங்க செயலாளர் புதுக்குளம் கவிதா தலைமை தாங்கினார். சமுத்திர வேலு, மணலூர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் வீட்டை விட்டு வந்த 2 அரவாணிகளை கிராமிய கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்தினர் தத்தெடுத்தனர். லுங்கி, சட்டையுடன் வந்த அரவாணிகளுக்கு சங்க அலுவலகம் முன்பு பெண்ணுக்கு மடிகட்டுதல் விழா நடந்தது.
முதலில் அவர்களை மற்ற அரவாணிகள் சேர்ந்து புனித நீராட்டினர். பின்னர் தாம்பூலத்தில் சேலை கொண்டு வந்து இரு அரவாணிகளுக்கும் கட்டினர். அதன்பிறகு சங்க செயலாளர் கவிதா, அரவாணிகளுக்கு ஆரத்தி எடுத்து அனிதா, சுதா என பெயரிட்டார்.
தொடர்ந்து சங்கத்தை சேர்ந்த 2 அரவாணிகளுடன் தத்தெடுத்த அரவாணிகளுக்கு திருமண வைபகம் நடந்தது. பின்னர் மணமக்களுக்கு மொய் வழங்கப்பட்டது. தம்பதிகளுக்கு மற்ற அரவாணிகள் புதிய உறவுகளாக அறிமுக செய்து வைக்கப்பட்டனர்.
பின்னர் சங்க செயலாளர் புதுக்குளம் கவிதா அரவாணிகள் சமுதாயத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று விளக்கி கூறினார். அரவாணிகளை யாரும் துன்புறுத்தினால் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications