அழகிரியின் 58வது பிறந்த நாள் - மதுரையைக் கலக்கிய தொண்டர்கள்

அழகிரிக்கு இன்று 58வது பிறந்த நாளாகும். இதையொட்டி அவரது ஆதரவாளர்கள் மதுரை நகரையே தடபுடலாக்கி விட்டிருந்தனர்.
திரும்பிய திசையெல்லாம் பேனர்களும், போஸ்டர்களும், சுவர் விளம்பரங்களும் கலக்கலாக இருந்தன.
மு.க அழகிரி என்றாலே எல்லோருக்கும் (அட... எதிர்கட்சிகளுக்கும்தாங்க!) நினைவுக்கு வரும் பெயர் அஞ்சா நெஞ்சன். பிறந்தநாளும் அதுவுமாக இப்போது அழகிரியின் கண்மணிகள் தங்கள் அண்ணனுக்குப் புதுப் பட்டம் சூட்டிப் பார்க்க முடிவு செய்துவிட்டார்கள்.
அழகிரி சாதாரணமாக இருந்தபோதே மதுரை திமுகவினருக்கு அவர்தான் 'காட்'. இப்போதோ அவர் திமுகவின் தென்மண்டல அமைப்புச் செயலாளர்... தலைமைக் கழக உயர்மட்ட செயற்குழு உறுப்பினர் வேறு. அதாவது 17 மாவட்ட திமுகவும் இப்போது அவரது கட்டுப்பாட்டில்தான்.
தென் மாவட்டங்களைப் பொறுத்தவரை இனி கோஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒரே கோஷ்டி, அழகிரி கோஷ்டிதான்.
புதிய பதவிகள், அதிகாரங்களோடு வலம் வரும் அழகிரியின் பிறந்தநாளையொட்டி, அவரது தொண்டர்கள் தமிழகம் முழுக்க ஏராளமான பேனர்களை வைத்திருந்தனர்.
அதில் ஒன்றுதான் எந்திரன் பேனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் பட டிசைன் ஒன்றை, அழகிரிக்காக இப்படி மார்ஃபிங் செய்துள்ளனர்.
அதில் உள்ள வாசகங்கள்:
'பை எலக்ஷன் சூப்பர்ஸ்டார், கழகத்தின் எந்திரன் அழகிரிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்' என அந்த பேனர்களில் அச்சிட்டுள்ளனர்.
இன்னும் சில பேனர்களில்... 'திமுகவின் புதிய அரசியல் சரித்திரம் துவங்குகிறது!' என்றும், 'இனி தெற்கும் வளரும்!' என்றும் எழுதி மகிழ்ந்துள்ளனர்.
முன்னதாக ராஜா முத்தையா மன்றத்தில் நடந்த பிறந்த நாள் விழாவில் அழகிரி கலந்து கொண்டார். அங்கு பிரமாண்ட கேக்கை அவர் வெட்டினார்.
மனைவி காந்தி அழகிரி, மகள்கள் கயல்விழி, அஞ்சுகச் செல்வி, மகன் தயா, எம்.எல்.ஏ. கெளஸ் பாட்ஷா உள்ளிட்ட பெரும் திரளானோர் அதில் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications