சென்னை மராத்தான் - புனே ராணுவ வீரர் முதலிடம்
சென்னை: சென்னை மராத்தான் ஓட்டப் போட்டியில் புனேயைச் சேர்ந்த ராணுவ வீரர் முதலிடத்தைப் பிடித்தார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மராத்தான் ஓட்டம் சென்னை மெரீனா கடற்கரையில் இன்று காலை நடந்தது.
முழு மராத்தான், பாதி மராத்தான், மினி மராத்தான் உள்பட மொத்தம் 9 பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டது.
முழு மராத்தான் போட்டி்கான தூரம் 42.2 கிலோமீட்டர் தூரமாகும். பாதி மராத்தான் போட்டிக்கான தூரம் 21.1 கிலோமீட்டர் ஆகும். மினி மராத்தானின் தூரம் 10 கிலோ மீட்டர்.
கிட்டத்தட்ட 15 ஆயிரம் பேர் இதில் பங்கேற்றனர். காலை 6 மணிக்கு கடற்கரைச் சாலை அண்ணா சமாதி அருகே போட்டியை மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் டி.பி.எம். மைதீன் கான் தொடங்கி வைத்தார்.
செய்தி விளம்பரத்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, மாநகராட்சி மேயர் மா.சுப்ரமணியன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை முதன்மைச் செயலாளர் கிறிஸ்துதாஸ் காந்தி, தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் டேவிதார், தமிழ்நாடு விளையாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் சுதீப் ஜெயின், மாநகர காவல்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன், முன்னாள் வீரர்கள், நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
முழு மராத்தான் போட்டியில் புனேயைச் சேர்ந்த ராணுவ வீரர் முதலிடத்தைப் பிடித்தார். அவருக்கு ரூ. 5 லட்சம் பரிசாக அளிக்கப்பட்டது.
-
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications