அறிவியல் அதிசயம்-நூல் மதிப்புரை

ஆசிரியர்: பொறியாளர் எம்.ஜே.எம் இக்பால்
அறிவியல் கட்டுரைகள் எழுதுவது என்பது அனைவருக்கும் கைவருவதில்லை. அவற்றை எழுதுபவர்களுக்கு முதலில் குறைந்த பட்சம் ஏதேனுமோர் அறிவியல் துறையில் ஆழ்ந்த ஞானம் இருக்க வேண்டும். இரண்டாவதாக, அறிவியல் துறைகளில் நிகழ்ந்து வரும் வளர்ச்சிகள் மற்றும் மாற்றங்களைக் குறித்த தெளிந்த அறிவும் மிகுந்த மதி நுட்பத்துடன் அவற்றைப் புரிந்து கொள்ளும் ஆற்றலும் அவசியம். மூன்றாவதாக, கட்டுரையாளருக்கு தாம் பயின்றுள்ள அறிவியல் துறை பற்றிய ஞானத்துடன் நின்று விடாமல் மற்ற அறிவியல் துறைகளைக் குறித்தும் ஓரளவு ஞானமும் அத்துறைகள் தொடர்பான தகவல்களையும் நன்கு புரிந்து கொள்ளும் ஆற்றலும் இருக்க வேண்டும்.
நான்காவதாக, அவ்வப்போது நிகழ்ந்து வரும் மிக சமீபத்திய அறிவியல் விந்தைகள் மற்றும் கண்டுபிடிப்புகளைத் தேடிப்பிடித்து அவற்றை ஊன்றிப் படித்துப் புரிந்து கொள்வதோடு, அவற்றில் அதிகப் பலனுள்ள அதிசயமான நிகழ்வுகள், கண்டுபிடிப்புகள், ஆய்வுகளைத் தெரிவுசெய்யும் திறமையும் பெற்றிருக்க வேண்டும். ஐந்தாவதாக, அந்த அறிவியல் விந்தைகளை அனைவருக்கும் புரியும் வகையில் எளிய நடையிலும் சலிப்பூட்டாத வகையில் சுவையோடும் எடுத்துச் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும். அவற்றை எழுதும் விதம் வாசகர்கள் ரசித்து படித்து ருசிக்கும் வகையில் இருக்க வேண்டும்.
பூம்புகார் பதிப்பகம் வெளியிட்டுள்ள அறிவியல் அதிசயம் நூலின் ஆசிரியர் பொறியாளர் எம்.ஜே.எம். இக்பால் அவர்கள் இந்த ஐந்து அம்சங்களும் ஒருங்கே அமையப்பெற்றிருக்கின்றார்.
இந்த நூலுக்கு பல சிறப்பம்சங்கள் உள்ளன. முதலாவதாக இது தமிழகத்தின் மிகப் பிரபலமான நாளிதழான தினத்தந்தியின் இளைஞர் மலரில் வெளிவந்து தமிழக மக்களிடையே, குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே அமோகமான வரவேற்பைப் பெற்ற தொடர் கட்டுரைகளின் தொகுப்பாகும்.
அடுத்து இந்த நூலில் விளக்கப்பட்டுள்ள அறிவியல் அதிசயங்கள் அனைத்துமே அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் தொடர்பான பொது அறிவை வளர்த்துக்கொள்ளும் தேவையும் அதற்கான ஆர்வமும் கொண்டவர்கள், அவர்கள் இளைஞர்களாயினும், பெரியவர்களாயினும், மாணவர்களாயினும் எவராயினும் பயனடையும் விதத்தில் பெரும்பாலும் அனைத்துத் துறைகளிலும் பரவலாக நிகழ்ந்து வருகின்ற எல்லாவித விந்தைமிகு அறிவியல் முன்னேற்றங்களையும் எளிமையுடன் நம்முன்னே படம் பிடித்து காட்டுகிறது.
மேலும், தமிழகத்தின் முதல் தர பதிப்பகமான, தரமான நூல்களை வெளியிடும் பூம்புகார் பதிப்பகம், இந்த அரிய அறிவியல் விந்தை தொடர்களை தொகுத்து வெளியிட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்குமே என்று கருதி இந்த கட்டுரைத் தொகுப்புகளை நூலாக வெளியிட்டது மட்டுமின்றி ஏராளமான அறிவியல் அதிசயங்களைத் தாங்கி நிற்கும் இந்த நூலை வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறோம் என எழுதி இருப்பது ஒன்றே இந்த நூலின் சிறப்பை உணர்த்திடப் போதுமானதகும்.
இந்த நூலை நான்கு முக்கியத் தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தியுள்ளனர்.
1. விண்வெளி 2. தொழில்நுட்பம் 3. மருத்துவம் 4. விந்தை உலகம்
இதன் முதல் தலைப்பான விண்வெளி யில் விண்வெளி இல்லம், செவ்வாய்கிரகப் பயணம், விண்வெளி சுற்றுலா மற்றும் விண்வெளிப்பயணத்தின் விந்தைகள், விண்கலம் இயங்கும் முறையும் இன்னும் பல அதிசயக் கண்டுபிடிப்புகள், விண்வெளியின் பிரமிப்பூட்டும் மர்மங்கள் மற்றும் அதன் பிரமாண்டமான அமைப்பு முதலியவற்றை அழகாக விளக்குகின்றது.
செல்போன், கணினி, இணையம், தொலைத்தொடர்பு, வகைவகையான ரோபோக்கள் என தொழில்நுட்பம் தலைப்பிலுள்ள தகவல்கள் ஒவ்வொன்றும் இந்நூல் ஓர் அறிவியல் கலைக்களஞ்சியம் என்கிற அளவிற்கு வியக்க வைக்கிறது.
மருத்துவ உலகின் அதிசயங்கள் மூன்றாம் தலைப்பில் வியப்பூட்டும் வகையில் விவரித்திருக்கின்றார் நூலாசிரியர். உயிர்காக்கும் ஸ்டெம்செல், ப்ளூடூத் மூலம் மூளை ஸ்கேன், மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க உதவும் கம்ப்யூட்டர் சிப், செயற்கை ரத்தம், மறதி இல்லாத மனிதன் என நிகர் கூற முடியாத பல மருத்துவ அதிசயங்கள் "அடேங்கப்பா" என்று நம்மை மலைக்க வைக்கின்றன.
இறுதியாக, விந்தை உலகம் பகுதி கண்ணுக்குத் தெரியாத சட்டை, எந்திர உடை, கடலில் விமான நிலையம், புகையில்லா வாகனம், பறக்கும் பைக், பறக்கும் கப்பல், பறக்கும் கார், மிதக்கும் நகரம், மிதக்கும் ஆய்வகம், சூரிய ஒளிப்படகு என்று நம்மை சொக்க வைத்து அசத்தும் பல விந்தைகளை வியப்பூட்டும்படி விளக்குகிறார் ஆசிரியர்.
இந்நூலாசிரியர் இக்பால் அவர்கள் அறிவியல் தொழில்நுட்ப விந்தைகளை விரல் நுனியில் வைத்திருக்கும் ஒரு சூப்பர் கம்ப்யூட்டரோ என நம்மை எண்ண வைக்கும் விதத்தில் அமைந்துள்ளது அவருடைய அபார ஆற்றல் மிக்க எழுத்து!.
அரசு மற்றும் தனியார் நூலகங்களுக்கும் பெருமை சேர்க்கும் அறிவுக்களஞ்சியம்!
அறிவியல் அதிசங்களைப் புரிந்து கொள்வதும் கடினம். அதைவிடக் கடினம் அதைப் பிறர் புரிந்துகொள்ளும்படி எடுத்துரைப்பதாகும். அந்த உன்னத கலையினை கைவரப் பெற்றுள்ளார் இந்நூல் ஆசிரியர்.
ஆசிரியர் பொறியாளர் எம்.ஜே.எம் இக்பால்
நூலின் விலை ரூபாய் 500
பக்கங்கள் 496
வெளியீடு : பூம்புகார் பதிப்பகம், 127 ப.எண் (63),
பிரகாசம் சாலை (பிராட்வே), சென்னை 600108
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications