உலக தமிழ்க் கழக பொதுச் செயலாளர் குடந்தைக் கதிர். தமிழ்வாணன் மரணம்

Subscribe to Oneindia Tamil

கும்பகோணம்: உலகத் தமிழ்க்கழகத்தின் பொதுச்செயலாளரும் குடந்தைப் பகுதியில் தங்கித் தமிழாசிரியர் பணியும் தமிழ்ப்பணியும் புரிந்தவரும் பாவாணர் கொள்கைகளில் ஆழமான பிடிப்பு கொண்டவருமான குடந்தைக் கதிர். தமிழ்வாணன் இன்று காலை மரணமடைந்தார்.

காலை 6.35 மணியளவில் அவர் இயற்கை எய்தினார்.

கதிர்.தமிழ்வாணனார், இரண்டு சிறுநீரகங்களும் பாதிப்புற்று அண்மையில் புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வந்தார்.

சிறிது முன்னேற்றம் கண்ட அளவில் குடந்தையில் உள்ள அவரது இல்லத்தில்(54 பாவாணர் இல்லம், சான் செல்வராசு நகர், குடந்தை(புதிய பேருந்து நிலையம் கீழ்ப்புறம்) ஓய்வெடுத்து வந்தார்.

தமிழ்வாணன், தனது கண்களைத் தானமாக வழங்க முன்பே உறுதிமொழி செய்திருந்தார். அதன் பிறகு உடற்கொடை செய்யவும் ஆவணம் தயாரித்து வைத்திருந்தார்.

அதன்படி இன்று பகல் ஒரு மணியளவில் இல்லத்திலிருந்து உடல் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பெற்று கண் கொடை வழங்கி, இங்கிருந்து தஞ்சாவூரில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகிறது.

மேலும் விவரம் அறிய பேராசிரியர் அ.குணசேகரனைத் (9487031795) தொடர்பு கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+