துபாய் ஈமான் அமைப்பு நடத்திய மானுட வசந்தம் நிகழ்ச்சி
துபாய்: துபாயில் ஈமான் அமைப்பினர் சார்பில் மானுட வசந்தம் நிகழ்ச்சி நடந்தது. இதில் டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மது கலந்து கொண்டார்.
கடந்த 27ம் தேதி இந்திய கன்சுலேட் அரங்கில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு ஈமான் அமைப்பின் தலைவர் செய்யது எம். ஸலாஹுத்தீன் தலைமை வகித்தார். ஹாபிஸ் முஹம்மது இப்ராஹிம் இறைவசனங்களையும், அதன் தமிழ் மொழியாக்கத்தை ஈமான் விழாக்குழு செயலாளர் காயல் யஹ்யா முஹ்யித்தீன் வாசித்தார்.
ஈமான் அமைப்பின் துணைத்தலைவர்கள் எம்.அப்துல் கத்தீம், ஏ. அஹமது முஹைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் குத்தாலம் ஏ.லியாக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார்.
ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் எம்.அப்துல் ரஹ்மான் துவக்கவுரை நிகழ்த்தினார்.
அவர் பேசுகையில், நாம் பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் மனங்களால் ஒத்தவர்கள். இதனைப் புரிந்து கொண்டு நாம் அனைவரும் ஒரு குடும்பமாக இணைந்து செயல்பட இந்நிகழ்ச்சி பெரிதும் உதவும் என்ற நன்னோக்கில் துபாய் ஈமான் அமைப்பு இம்மானுட வசந்தம் நிகழ்ச்சியினை தங்களுக்கு வழங்குகிறது என்றார்.
ஈமான் அமைப்பின் கல்விக்குழுத்தலைவர் பி.எஸ்.எம்.ஹபிபுல்லாஹ், இந்து சமுதாயத்தின் பிரதிநிதியாக வெங்கடாச்சலம் ராமசாமி குருக்களும், கிறிஸ்தவ சமுதாயத்தின் சார்பாக அருட்தந்தை பால் ரிச்சர்ட் ஜோசப் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
வெங்கடாச்சலம் ராமசாமி குருக்கள் பேசுகையில், மனிதனால் கண்டறிய முடியாத ஒரு சூப்பர் பவர் சக்தி அதுவே கடவுள். உங்கள் வாழ்வில் வசந்தம் ஏற்பட இந்ந மானுட வசந்தம் நமக்கு உதவும் என்பதில் சந்தேகமில்லை என்றார்.
ஈமான் அமைப்பின் ஊடகத்துறை ஒருங்கிணைப்பாளர் முதுவை ஹிதாயத் நன்றி கூறினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications