துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாதுப் பெருவிழா
Subscribe to Oneindia Tamil
துபாய் ஈமான் அமைப்பு (www.imandubai.org) திருநபியின் உதய தினவிழாவை மீலாதுப் பெருவிழாவாக ஹிஜிரி 1430 ரபியு அவ்வல் பிறை 12 , மார்ச் 08,2009 ஞாயிற்றுக்கிழமை மாலை இஷா தொழுகைக்குப்பின் 9.00 மணிக்கு தேரா லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் (குவைத் பள்ளி) நடத்த இருக்கிறது.
லூத்தா ஜாமிஆ மஸ்ஜித் கத்தீம் மவ்லவி எம்.ஏ. காஜா முஹம்மது ஜமாலி மக்கீ மன்பஈ சிறப்புரை நிகழ்த்துகிறார்.
தமிழகத்தில் இருந்து வருகை புரிந்த மீலாது சிறப்புப் பேச்சாளரும், அல் அஸ்ரார் மாத இதழ் ஆசிரியர் மவ்லவி அப்ஸலுல் உலமா காயல் டி.எஸ்.ஏ. செய்யிது அபுதாஹிர் ஆலிம் விழாப் பேருரை நிகழ்த்துகிறார்.
பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.
விழா குறித்து மேலும் விபரமறிய : காயல் டி.எஸ்.ஏ. யஹ்யா முஹ்யித்தீன் 050 58 53 888


Click it and Unblock the Notifications
