For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருச்செங்கோட்டில் தமிழ் இணையப் பயிலரங்கு

By Sridhar L
Google Oneindia Tamil News

திருச்செங்கோடு: உலகில் வளர்ந்து வரும் துறையாக இருப்பது இணையம் என்ற தொழில்நுட்பத் துறையாகும்,தமிழ் வழியாக இணையத்தைக் கொண்டு சேர்க்கும் முயற்சி அண்மைக் காலமாகத் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.

தமிழ் இணையப் பயிலரங்குகள் தமிழகம் முழுவதும் பரவலாக நடத்தப்பெற வேண்டும். அப்பொழுதுதான் தமிழில் வலைப்பூக்கள் வழியாகத் தமிழ்சார்ந்த செய்திகள் உலகம் முழுவதும் உள்ளவர்களுக்குப் பயன்படும் வகையில் கிடைக்கும்.தமிழ்ப் பக்கங்களின் எண்ணிக்கை மிகுதியாகும்.

அவ்வகையில் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்.கலை அறிவியல் கல்லூரி அமெரிக்காவில் உள்ள தமிழ் மணம் இணையத்திரட்டியுடன் இணைந்து ஒரு நாள் பயிலரங்கை நடத்துகிறது.பல நூறு மாணவர்கள் பயன்பெற உள்ளனர்.

இடம்: கே.எஸ்.ஆர்.கலை அறிவியல் கல்லூரி,திருச்செங்கோடு,
நாள்: 14.03.2009,சனிக்கிழமை.
நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை

புலவர் இராசு, கவிதா சீனிவாசன்,முனைவர் நா.கண்ணன், முனைவர் மு.இளங்கோவன், முனைவர் குணசீலன், இரா.சந்திரசேகரன், கார்த்திகேயன், ப.சரவணன், த.கண்ணன் உள்ளிட்டவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

இப் பயிலரங்கில் தமிழ்த் தட்டச்சு,மின்னஞ்சல்,தமிழ் இணைய இதழ்கள், விக்கிபீடியா, இணையப்பாதுகாப்பு, வலைப்பூ உருவாக்கம் பற்றி காட்சி விளக்கத்துடன் பயிற்சியளிக்க உள்ளனர்.

முன்பதிவு செய்து கலந்துகொள்ள வேண்டும்

தொடர்புக்கு:

பேராசிரியர் இரா.சந்திரசேகரன் அவர்கள்
தமிழ்ப்பேராசிரியர்
கே.எஸ்.ஆர்.கலை அறிவியல் கல்லூரி
திருச்செங்கோடு- 637 215
செல்பேசி + 94435 51701
மின்னஞ்சல் [email protected]

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X