இடியாப்ப சிக்கலில் கலைஞர் தமிழ்ப் பேரவை !
கோவை: கலைஞர் தமிழ்ப் பேரவையை திமுக சேர்ந்தவர்களே அழிக்க நினைக்கின்றார்கள் என்று அதன் தலைவர் திருநாவுக்கரசு குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த 2006 -ம் ஆண்டு சென்னை சேத்துப்படு மைதானத்தில் கலைஞர் தமிழ்ப் பேரவை தொடங்கப்பட்டது. இந்த விழாவில் தமிழக செய்தி்த்துறை அமைச்சர் பரிதிஇளம்வழுதி உள்பட திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தற்போது இந்த கலைஞர் தமிழ் பேரவை தமிழகம் முழுக்க செயல்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் கலைஞர் தமிழ்ப் பேரவை சார்பில் சமீபத்தில் கோவையில் ஒரு விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார் அதன் தலைவர் திருநாவுக்கரசு. ஆனால் இந்த விழாவுக்கு திமுக முன்னணி நிர்வாகிகள் உள்பட பலரும் புறக்கணித்து விட்டதாக கூறப்படுகின்றது.
விழாவை ஏற்பாடு செய்து நடத்திய கலைஞர் தமிழ்ப் பேரவை மாநிலத் தலைவர் திருநாவுக்கரசு இது குறித்து கூறுகையில், கலைஞர் தமிழ்ப் பேரவை கலைஞருக்காக உருவாக்கப்பட்ட இயக்கம்.
கலைஞரின் தமிழ், அரசியல், சமுதாயம், இலக்கியப் பணிகளை மக்களிடம் எடுத்துச் செல்ல ஏற்படுத்தப்பட்ட இயக்கம்.
இயக்கம் தொடங்கிய காலத்தில் இருந்தே எனக்கு திமுகவின் மூத்த நிர்வாகிகளே தொல்லை கொடுத்து வருகின்றனர்.
கேவையில் கலைஞர் தமிழ்ப் பேரவை சார்பில் விழா ஏற்பாடு செய்திருந்தோம். அதில் திமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளே கலந்து கொள்ளாமல் புறக்கணி்த்து விட்டனர்.
அது மட்டும் அல்ல எங்களது நிர்வாகிகளுக்கும், எனக்கும் தொடர்ந்து திமுகவினர் கொலை மிரட்டல் விடுத்த வண்ணம் உள்ளனர் என்றார்.
கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக அவர் கோவை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் அப் புகாரை போலீசார் வாங்க மறுத்துவிட்டாதகவும் கூறப்படுகின்றது.
போலீஸ் தரப்பில் விசாரி்த்தால் மவுனம் மட்டுமே பதிலாக கிடைக்கின்றது.












Click it and Unblock the Notifications