Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காசநோயை ஒழிப்போம்

Subscribe to Oneindia Tamil

-புன்னியாமீன் (இலங்கை)

ஆரோக்கியமான நுரையீரலையும், மூளையையும் கொண்டவர்களைத் தவிர எஞ்சியுள்ள இளைஞர்களைத் தாக்கும் கொடிய நோயாக காசநோய் (Tuboclosis) அறியப்பட்டது. அதனால் 1996ல் உலக சுகாதார தாபனம் 'காசநோய் உலக அச்சுறுத்தல்' எனப் பிரகடனம் செய்தது.
பொருளாதார அபிவிருத்தியைப் பொறுத்தவரை இளைஞர்கள் மிக முக்கியமானவர்கள். உற்பத்தித்திறன் கொண்டவர்கள். இத்தகையவர்கள் சயரோக நோய்வாய்ப்பட்டு மரணிக்கும்போது அது பொருளாதாரத்துக்கு பேரழிவாக அமைகின்றது. இதனால் இந்நோய் பற்றிய மக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அனைத்துலக காச நோய் நாள் (World Tuberculosis Day ) மக்களிடையே காச நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 24 அன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.

காசநோய் மனித வர்க்கம் உற்பத்தியான காலத்திலிருந்து உருவான ஒரு நோயாகும். எகிப்தின் பூதவுடல்களில் (Mumy) காசநோய் இருந்ததற்கான தடயங்கள் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 5000 வருடங்களாக மனிதர் இந்நோயுடன் இருந்து வருகின்றார்கள். இந்நோய்க்கான காரணிகள் ஒருவகை மாடுகளிலேயே வாழ்கின்றன.

இவை பாலுடன் வெளியேறும். காசநோய்க்கான நுண்ணங்கிகள் அதிக தாக்குப்பிடிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளமையால் பாலுற்பத்திப் பொருட்களுடனும் காணப்படலாம். தொற்றுதல் ஏற்பட்டவரின் வயது, நோயெதிர்ப்புத் தன்மை, போசணைநிலை என்பன நோயைத் தீவிரமாக்குவதில் செல்வாக்குச் செலுத்துகின்றன.

உயிரினங்களில், மூச்சுத் தொகுதி அல்லது மூச்சியக்கத் தொகுதி அல்லது சுவாசத் தொகுதி (respiratory system) உடற் செயற்பாடுகளுக்குத் தேவையான வளியை உள்ளிழுத்து வெளிவிடும் பணியைச் செய்கிறது. பயன்படும் வளியானது, தொகுதியின் உடற்கூறு அல்லது அமைப்பு, வழங்கப்படும் வளியின் உடலியல் பயன்பாடு என்பன உயிரினங்களைப் பொறுத்து வேறுபடுகின்றன..

மனிதர்களிலும், பிற பாலூட்டிகளிலும் மூச்சுத் (சுவாசத்) தொகுதியின் உடற்கூற்று அம்சங்களாக மூச்சுக் குழாய்கள், நுரையீரல், மூச்சியக்கத் (சுவாசத்) தசைநார்கள் என்பன காணப்படுகின்றன. ஒட்சிசன் மூலக்கூறுகளும், காபனீரொட்சைட்டு மூலக்கூறுகளும் பரவல் மூலம், வெளிச் சூழலுக்கும், குருதிக்கும் இடையே மாற்றீடு செய்துகொள்ளப் படுகின்றன. இம் மாற்றீடு நுரையீரலின் நுண்குழியப் பகுதியில் நடைபெறுகின்றது.

பூச்சிகள் போன்ற உயிரினங்களில் மூச்சுத் தொகுதி மிகவும் எளிமையான உடற்கூற்றியல் அமைப்பைக் கொண்டனவாக உள்ளன. ஈரூடகவாழிகளில், அவற்றின் தோலும் கூட வளிப்பரிமாற்றத்தில்; முக்கிய பங்கு வகிக்கிறது.
நுரையீரலின் நுண்குழியப் பகுதியில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் காரணமாகவே காச நோய் ஏற்படுகின்றது.

மார்ச் 24, 1882 ஆம் ஆண்டில் டாக்டர் றொபேர்ட் கொக் (Robert Koch) என்பவர் காசநோய்க்கான காரணியை (TB bacillus) பெர்லினில் அறிவித்து அறிவியல் உலகை வியப்பில் ஆழ்த்தினார். அந்நாளில் இந்நோய் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் ஏழு பேருக்கு ஒருவரின் உயிரைக் காவு கொண்டு வந்தது. றொபேர்ட் கொக் கின் இக்கண்டுபிடிப்பு காச நோய் பற்றி முழுமையாக அறிய வழிவகுத்தது.

ராபர்ட் கோக் (Robert Koch, டிசம்பர் 11, 1843 – மே 27, 1910) ஜெர்மானிய அறிவியலாளரும், மருத்துவரும் ஆவார். இவர் 1877 இல் பாசில்லஸ் ஆந்த்ராசிஸ் எனும் கோலுரு நுண்ணுயிர், 1882 இல் மைக்கோ பாக்டீரியம் என்ற காச நோயை உருவாக்கும் நுண்ணுயிர், மற்றும் வைபிரியோ காலரா என்ற கொள்ளை நோயை உருவாக்கும் நுண்ணுயிர் ஆகியவற்றை வேறுபடுத்தியமைக்காகவும் கோக்கின் எடுகோள்களுக்காகவும் அறியப்படுகிறார்.

1982 ஆம் ஆண்டில் இக்கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நினைவு நாளில் காச நோய் மற்றும் இருதய நோய்களுக்கெதிரான அனைத்துலக அமைப்பு (International Union Against Tuberculosis and Lung Disease - IUATLD) மார்ச் 24 ஆம் நாளை உலக காசநோய் நாளாக அறிவிக்க வேண்டுகோள் விடுத்தது.

1996 ஆம் ஆண்டில் இருந்து உலக சுகாதார அமைப்பு (WHO) இந்நாளை காசநோய் விழிப்புணர்வு நாளாக அறிவித்தது. காச நோய் பற்றிய இவரது ஆய்வுக்காக 1905 இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

நோய் பரவும் முறை

ஆரம்ப காலத்தில் காசநோயை ஒரு பயங்கர வியாதியாகவே மக்கள் கருதினர். நோயாளிகளை தனிமைப்படுத்துவதும் ஒதுக்கி வைப்பதும் மிக முக்கியமான செயலாக நடைமுறைப்படுத்தினர். ஆனால் தற்போது அத்தகைய அவசியம் ஏற்படுவதில்லை. நோயாளியின் உமிழ் நீர், சளி போன்றவை காற்றில் கலப்பதினால் காசநோய் இன்னோருவரை தொற்றுகின்றது.

காசநோய்க்கான அறிகுறிகள் வருமாறு

உடற் சோர்வு
உணவு விருப்பின்மை
நீடித்த காய்ச்சலும் இருமலும்
மஞ்சட் சளி
நெஞ்சு நோவு
அடிக்கடி தடிமன்
சிலரில் இரவுநேர அதிக வியர்வை
இருமலுடன் அதிகளவு குருதி

காச நோய் ஏற்படுமிடத்து தொடர்ச்சியாக ஆறு மாத காலத்துக்குக் கட்டாய சிகிச்சை அத்தியாவசியமானதாகும். தவறுமிடத்து எதிர்ப்பு சக்தியுடைய நோய்க்கிருமிகள் உருவாகி நோயைக் குணப்படுத்த முடியாத நிலை ஏற்படும். பொதுவாக நோயாளிகள் முதல் நாளிலேயே தாம் சிகிச்சை பெற்றுவிட்டோம் என நினைத்து தொடர்ந்து சிகிச்சை பெறுவதை விட்டுவிடுகின்றனர்.

நோய் அறிகுறிகள் மறைந்துவிடுவதால் தாம் பூரண சுகம் அடைந்துவிட்டதாக மூடநம்பிக்கை கொள்கிறார்கள். உண்மையில் ஒரு நோயாளியின் உடலிலிருந்து சயரோக கிருமிகளை முற்றாக இல்லாதொழிக்க குறைந்தது 6 மாதங்கள் எடுக்கின்றன.

போதியளவு நோயைக் குணப்படுத்தும் மாத்திரைகள் இருந்தும் தற்போது முன்னர் எப்போதுமில்லாத அளவு காசரோகத்தினால் மனிதர் இறக்கின்றனர். இந்நோய் மனிதருக்குச் சவாலாக நிலைத்து நிற்கின்றது. இதனை வெற்றி கொள்வது மனிதனின் இடைவிடாத முயற்சியாலேயே தங்கியிருக்கின்றது. காச நோய் மக்களைக் கொல்லும் அளவினை நோக்கினால் அது வருடாந்தம் எய்ட்ஸ் ஆகியவற்றின் பாதிப்புக்களை விட அதிகளவிலானது.

காச நோய் இன்று உலகில் 1.7 மில்லியன் மக்களை ஆண்டுதோறும் கொன்று குவிக்கும் ஒரு முக்கிய உயிர்கொல்லி நோயாக உள்ளது. முக்கியமாக மூன்றாம் உலக நாடுகளில் இந்நோய் இன்னமும் கட்டுக்கடங்காமல் உள்ளது இவர்களில் 80 சதவீதமானோர் 15 - 49 வயதுக்கு இடைப்பட்டோராவர். வருடாந்தம் 10 இலட்சத்துக்கும் அதிகமான பெண்களையும், ஒரு இலட்சத்திற்கும் அதிகமான சிறுவரையும் இந்நோய் பாதிக்கின்றது. காசநோய் மிகத்தீவிரமாக வளியின் மூலம் பரவுவதே இதற்குக் காரணமாகும்

அண்மைக் காலத்தில் இந்நோய் HIV வைரஸ் கிருமிகளைச் சார்ந்து விருத்தியடைந்துள்ளது. இவ்விரு நோய்களும் இரட்டை நோய்கள் என கருதப்படும் அளவு ஒன்றையொன்று தீவிரப்படுத்துவதோடு போ~pத்தும் வருகின்றன. HIV பீடித்துள்ள ஒருவரிடத்தில் காச நோய் 30 மடங்கு மேலாக வேகமாக பரவுகின்றது.

காசநோயைத் தவிர்ப்பதற்கு இன்று பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

BCG தடுப்பூசி குழந்தை பிறந்து 24 மணித்தியாலயத்திற்குள் கொடுக்கப்பட வேண்டும். இதன்போது தழும்பொன்று உருவாகும். இத்தழும்பு உண்டாகாதவிடத்து ஆறுமாதம் தொடக்கம் ஐந்து வயது காலத்திற்குள் இவ்வூசி மீண்டும் கொடுக்கப்பட வேண்டும்.

மூன்று கிழமைகளுக்கு மேல் இருமல் இருக்குமிடத்து உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறவும்

சன நெரிசலான இடங்கள், சூரிய வெளிச்சம் உள்வராத வீடுகள் இந்நோய் பரவுவதை ஊக்குவிப்பனவாகும்.

போசாக்குக் குறைபாடு இலகுவில் இந்நோய் தொற்ற வழிவகுக்கும் பசுப்பாலினாற் பரவுங் காசநோயைத் தவிர்க்க நன்கு கொதிக்க வைத்த பால் அல்லது பாய்ச்சர் முறையிற் பதனிட்ட பாலை அருந்தவும்.

பொதுவாக மக்கள் இருதயநோய், இரத்த அழுத்தம் போன்ற பயங்கர நோய்களைப் போன்று காசநோயைக் கருதுவதில்லை. தெற்கு, தென்கிழக்காசிய நாடுகளில் இந்நோயைக் கட்டுப்படுத்த முக்கிய கவனம் செலுத்தப்படுகின்றது.

காச நோய்க்காக பயன்படும் மருந்துகளாவன.

றிபம்பிசின் (Rifampicin)
ஐசோனியாசிட்(Isoniasid)
பைரமினமைட் (Pyriminamide)
எதம்பியூட்டோல் (Ethambutol)

பல மாத்திரைகளுக்குத் தாக்குப்பிடிக்கும் சயரோகம் (Multidrug Resistant Tuboclosis) என்பது மனிதரது சுகாதாரச் சீர்கேடுகளின்; விளைவாக ஏற்படும் நோயாகும். தற்போது உலக சுகாதார தாபனம் நேரடியாக அவதானிக்கும் சிகிச்சை முறையை (DOTS) அறிமுகம் செய்துள்ளது.

அதாவது நோயாளி அண்மையிலுள்ள சிகிச்சை நிலையத்திற்கு நேரடியாக வந்து ஒரு வைத்திய தாதியின் நேரடிக் கவனிப்பில் மாத்திரைகளை உட்கொள்ளும் முறையாகும். இதனால் பல மாத்திரைகளுக்கு தாக்குப்பிடிக்கும் சயரோகத்தை 95 சதவீதத்தால் குறைக்க முடிகின்றது.

இன்று மீண்டும் உலகின் பல பாகங்களிலும் இந்த மனிதகுல எதிரி தலை நிமிர்ந்துள்ளது. இதனைத் தடுக்க நேரடி அவதான முறையே பயனுள்ளது. தற்போது உலகளாவிய ரீதியாக பல அரசாங்கங்களும் இளைய தலைமுறையினரைப் பாதுகாக்கும் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளன.

வயோதிப செல்வந்தரைப் பாதுகாப்பதைவிட ஏழைச் சிறுவரைப் பாதுகாப்பது நாட்டுக்கு நலன் விளையும் என்பதை உணர்ந்து செயற்படுகின்றன.

(இன்று உலக காச நோய் தினம்)

- புன்னியாமீன் (இலங்கை)
[email protected]

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+