தமிழக மக்கள் கழக மாநாடு-புறக்கணித்த நடராஜன்!
கரூர்: கரூரில் நடைபெற்ற தமிழக மக்கள் கழகம் மாநாட்டை புதிய பார்வை ஆசிரியரும் சசிகலாவின் கணவருமான ம.நடராஜன் புறக்கணித்தார்.
கரூரில் தமிழக மக்கள் கழகம் சார்பில் தேர்தல் விழுப்புணர்வு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு தமிழக மக்கள் கழகம் மாநில தலைவர் முனுசாமி தலைமை வகித்தார்.
இந்த மாநாட்டில் புதிய பார்வை ஆசிரியர் ம.நடராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்று அழைப்பிதழ், போஸ்டர்களில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.
ஆனால், மாநாடு துவங்கிய பின்னரும் அவர் மேடைக்கு வரவில்லை. இதனால் அவரது ஆதரவாளர்கள் மேடை முன் கலாட்டா செய்தனர். அவர்களை மாநாட்டு பிரநிதிகள் அமைதிப்படுத்தினர்.
மாநாட்டிற்கு வருவது குறித்து ம.நடாராஜன் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு கேட்டபோது, இந்த விழாவுக்கு அவர் வரவில்லை.ரத்து செய்துள்ளார் என்று கூறினர்.
ஆனால், ம.நடராஜன் இந்த விழாவுக்கு வராததற்கு காரணம், தமிழக மக்கள் கழகம் கட்சியின் மாநில தலைவர் முனுசாமி மீது மாநாடுக்கு ஒரு நாள் முன்னதாக கரூர் நகர காவல் நிலையத்தில் மோசடி புகார் ஒன்று பதிவாகியுள்ளது.
இது குறித்து கரூர் நகர காவல் ஆய்வாளர் தங்கவேல் விசாரணை நடத்தி வருகிறார். இதை தெரிந்து தான் அவர் வரவில்லை என்று பரவலாக பேச்சு உள்ளது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications