சொந்தமாக வீடு, நிலம் இல்லாத லாலு!!!
டெல்லி: மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் தனக்கு சொந்தமாக வீடு, நிலம் எதுவும் இல்லை என்றும், தனது குடும்பத்துக்கு ஒட்டுமொத்தமாக ரூ 1.2 கோடி சொத்து மட்டுமே இருப்பதாக கணக்கு காட்டியுள்ளார்.
பீகார் முதலமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவ் கடந்த 1997ல் மாட்டூ்த் தீவண ஊழலில் சிக்கி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதில் இவரும் இவரது மனைவி ராப்ரி தேவியும் பல கோடி ரூபாய் சுருட்டியதாக குற்றம்சாட்டப்ட்டது.
தற்போது மத்திய ரயில்வே அமைச்சர் இருக்கும் லாலு பிரசாத் யாதவ் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பீகாரில் உள்ள சரண் தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார். அத்தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த அவர் அதனுடன் தனது சொத்து பட்டியலையும் இணைத்துள்ளார்.
அதில் அவர்,
எனக்கு சொந்தமாக வீடு, நிலம் எதுவும் இல்லை. வங்கிகளில் மட்டும் ரூ. 12.11 லட்சம் கையிருப்பு உள்ளது. எனது பெயரில் ரூ. 95 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகள் இருக்கின்றன.
இது தவிர ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள மாருதி கார் ஒன்றும், ஏலத்தில் எடுக்கப்பட்ட ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள ஜீப் ஒன்று இருக்கிறது.
வங்கிகளில் எனது மனைவி ராப்ரி தேவியின் பெயரில் ரூ. 24 லட்சமும், தங்களது குழந்தைகளின் பெயரில் ரூ. 39.58 லட்சமும் உள்ளது. ராப்ரிக்கு ரூ 63 லட்சம் மதிப்புள்ள நிலமும், தனது குழந்தைகளுக்கு ரூ. 57.7 லட்சம் மதிப்புள்ள நிலமும் இருக்கிறது.
எங்களது குடும்பத்துக்கு சொந்தமாக 60 மாடுகளும், 36 கன்றுகளும் உள்ளன. இவற்றின் மதிப்பு ரூ. 10 லட்சம் என லாலு தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications