'இனி தமிழன் என்று சொல்லடா தலைகுனிந்து நில்லடா'-சத்யராஜ்

கவிஞர் பா.விஜய் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ஞாபகங்கள். இந்தப் படத்தின் கதை, வசனம், பாடல்கள் எழுதி தயாரிக்கிறார் விஜய்.
இந்தப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை ஏவி.எம். ஏசி ப்ளோரில் நடந்தது. பாடல்களை கவிஞர் வாலி வெளியிட, வைரமுத்து பெற்றுக் கொண்டார். விழாவுக்கு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன் தலைமை தாங்கினார்.
விழாவில் பங்கேற்ற நடிகர் சத்யராஜ் பேசியதாவது:
இந்தப் பட நாயகன் விஜய்யைப் பார்க்கும் போதும், இந்த விழா நடைபெறும் இடத்தைக் கவனிக்கும்போதும் எனக்குள் பழைய ஞாபகங்கள் வந்துவிட்டன.
நான் முதன்முதலாக சினிமா வாய்ப்பு கேட்டு நின்ற இடம் இந்த ஏவி.எம்.ஸ்டூடியோதான். முதன்முதலாக புரொடக்ஷன் மானேஜர் வேலை பார்த்ததும் இதே ஏவி.எம்.ஸ்டூடியோவில்தான். நான் நடித்த வேதம் புதிது' படத்தை எம்.ஜி.ஆர். பார்த்தது, பாராட்டியதும் இதே ஏவி.எம்.ஸ்டூடியோவில்தான். இப்படி பல ஞாபகங்கள் என்னைக் கடந்து போகின்றன.
விஜய் என்ற பெயரை சொல்லும்போது, எனக்கு விஜயனன் என்ற பெயர் ஞாபகம் வருகிறது. யார் இந்த விஜயனன் தெரியுமா நண்பர்களே... ஒரிஸ்ஸாவில் இருந்து இலங்கைக்கு போய் குடியேறிய முதல் சிங்கள மன்னன்தான் இந்த விஜயனன். அதற்கு முன்பே தமிழர்கள் அங்கு குடியிருந்தார்கள். தமிழ் மன்னர்கள் பெரும் ராஜ்ஜியத்தை கட்டி ஆணடார்கள். இதற்கு ஆதாரமாக சிங்கள அரசே விஜயனன் என்ற மன்னனின் தபால் தலையைக் கூட வெளியிட்டுள்ளது. ஆக, வரலாற்றுரீதியாக இலங்கை தமிழர்களின் பூமி.
ஒண்ட வந்த பிடாரி, ஊர் பிடாரியை விரட்டியதுபோல் இன்று சிங்கள அரசு நம் தமிழர்களை விரட்டுகிறது. இலங்கை மண்ணுக்கு உரிமை கொண்டாட வேண்டியவர்கள் தமிழர்கள்தான்.
ஐயா...நான் இறையாண்மைக்கு எதிரா எதுவும் பேசலீங்க... உண்மையைப் பேசுறேன்... சரித்திரத்தை, இந்திய- இலங்கை அரசாங்கங்கள் ஏற்றுக் கொண்ட சரித்திரத்தைத்தான் சொல்கிறேன்.
இந்த ஞாபகங்கள் விழாவில் நெஞ்சைவிட்டு அகலாத ஞாபகமாக ஈழ மண்ணில் நம் சொந்தங்கள் அழிந்துகொண்டிருப்பது சுற்றிச் சுழல்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள எல்லா அமைப்புகளும், எல்லா கட்சிகளும் ஒன்று சேர்ந்து ஈழ தமிழர்களுக்காக மீண்டும் குரல் கொடுக்க வேண்டும்.
லண்டனில் இரண்டு லட்சம் தமிழர்கள் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். பிரான்சு, ஜெர்மனி, நார்வே, அமெரிக்கா, ஆஸ்திரேலியா என உலகம் முழுக்க தமிழர் கொடியுடன் தமது உறவுகளின் உயிர்காக்க கண்ணீரும் கம்பலையுமாக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
நாம் அவற்றைப் பற்றிய செய்திகளைப் படித்துக் கொண்டு பொழுதைக் கழிப்பதை விட்டுவிட்டு, மீண்டும் நமது உணர்வுகளை வலிமையாக இந்த அரசுக்குப் புரியும் விதமாகக் காட்ட வேண்டும்.
அனைத்து தலைவர்களும், கலைர்களும் ஒன்று சேர்ந்து, இலங்கை தமிழர்களுக்காக மீண்டும் ஒரு போராட்டத்தை அறிவிக்க வேண்டும். அதில், அனைத்து துறைகளை சேர்ந்தவர்களும்கூட கலந்துகொள்ள வேண்டும்.
உலகம் முழுக்க 8 கோடி தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இலங்கையில் உள்ள 3 லட்சம் தமிழர்களை நாம் காப்பாற்றவில்லை என்றால், தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று சொல்லிக்கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை. இனி தமிழன் என்று சொல்லடா தலை குனிந்து நில்லடா என்றுதான் சொல்ல வேண்டியது வரும் என்றார் சத்யராஜ்.
விழாவில் பா.விஜய்யின் தந்தை பாலகிருஷ்ணன் வரவேற்று பேசினார். பா.விஜய், படத்தின் டைரக்டர் ஜீவன் ஆகிய இருவரும் நன்றி கூறினார்கள்.
தயாரிப்பாளர்கள் ஏவி.எம்.சரவணன், இயக்குநர்கள் கே.பாக்யராஜ், சேரன், அமீர், ஆர்.வி.உதயகுமார், நடிகர் ஜெயம் ரவி உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தினர்.
-
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங்












Click it and Unblock the Notifications