ரூ. 85,000க்கு ஏலம் போன கார் பதிவு எண் - 'ஏ.கே.47'
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், ஏ.கே.47 என்ற கார் பதிவு எண்ணை முகம்மது ரபீக் மிர் என்பவர் ரூ. 85,000 பணத்திற்கு ஏலம் எடுத்துள்ளார்.
கார், பைக், போன் என எண்களைக் கொண்ட எதுவாக இருந்தாலும் அதில் பேன்சி எண் வேண்டும் என ஒற்றைக் காலில் நிற்பவர்கள் நிறைய பேர்.
இதற்காக சம்பந்தப்பட்டவர்களை தனியாக கவனித்து தங்களுக்குப் பிடித்தமான, ராசியான எண்களை வாங்குவது சகஜமாக நடந்து வருவதுதான்.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஏ.கே.47 என்ற எண்ணை ஏலம் எடுக்க கடும் போட்டியே நடந்துள்ளது. இறுதியில் அதில் வென்றவர் முகம்மது ரபீக் மிர் என்பவர்.
ஜம்மு காஷ்மீர் பிராந்திய போக்குவரத்து அலுவலகம் இந்த ஏலத்தை நடத்தி ஏ.கே.47 எண்ணை ரூ. 85,000க்கு விற்றுள்ளது.
ஜம்முவில் உள்ள பிராந்திய போக்குவரத்து அதிகாரி ரமேஷ் சந்தர் சர்மா முன்னிலையில் இதற்கான ஏலம் நடந்தது.
பூஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த மிர் ஏ.கே.47 எண்ணை ஏலம் எடுத்தது குறித்து கூறுகையில், ஏ.கே.47 என்ற எண் ஏலத்திற்கு வருவதை அறிந்து அதை எடுக்க தீர்மானித்தேன். அந்த எண் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் பெரும் தொகை கொடுக்கவும் நான் தயாராக இருந்தேன் என்றார்.
மொத்தம் 35 பேர் ஏ.கே. 47 எண்ணை ஏலம் எடுக்க வந்திருந்தனராம்.
இதற்கு முன்பு 007, 786, 420, 470, 777, 888 ஆகிய எண்களுக்கு கடும் கிராக்கி இருந்ததாம். ஆனால் தற்போது ஏ.கே. வரிசையில் வெளியாகும் பதிவு எண்களுக்கு செம கிராக்கியாம். அதிலும் ஏ.கே.47 என்ற எண்ணுக்குத்தான் 35 பேர் வரை போட்டியிட்டுள்ளனராம்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications