துபாய்: கொடைக்கான‌ல் ச‌ர்வ‌தேச‌ப் ப‌ள்ளி நிக‌ழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

Kodaikanal School
-முதுவை ஹிதாயத்

துபாயில் கொடைக்கான‌ல் ச‌ர்வ‌தேச‌ப் ப‌ள்ளியின் (www.kis.in) சார்பில் த‌க‌வ‌ல் வ‌ழ‌ங்குத‌ல் ம‌ற்றும் வ‌ர‌வேற்பு நிக‌ழ்ச்சி 6ம் தேதி மாலை 5.30 ம‌ணிக்கு இந்தியா கிளப்பின் உட்ச‌வ் அர‌ங்கில் ந‌டைபெறுகிற‌து.

கொடைக்கான‌ல் ச‌ர்வ‌தேச‌ப் ப‌ள்ளி நூறு ஆண்டுக‌ளைக் க‌ட‌ந்து க‌ல்விச் சேவை புரிந்து வ‌ருகிற‌து. ஆர‌ம்ப‌க் க‌ல்வி முத‌ல் உய‌ர்நிலைக் க‌ல்வி வ‌ரை இப்ப‌ள்ளியில் பாட‌ம் ந‌ட‌த்த‌ப்ப‌டுகிற‌து.

நிக‌ழ்ச்சி குறித்த‌ மேல‌திக‌ விப‌ர‌ம் பெற‌ ச‌வியோ ம‌ற்றும் விர்ஜினியோ 050 6515109 மின்ன‌ஞ்ச‌ல் [email protected]

இஸ்லாம்.. தொலைபேசி வ‌ழியே தீர்வு:

அமீர‌க‌த்தில் இஸ்லாமிய‌ விவ‌கார‌த்துறை இஸ்லாம் குறித்த‌ ச‌ந்தேக‌ங‌களை தொலைபேசி, குறுந்த‌க‌வ‌ல் (எஸ்.எம்.எஸ்) உள்ளிட்ட‌ ஊட‌க‌ங்க‌ள் வ‌ழியே தீர்வு கிடைக்கும் வ‌ண்ண‌ம் ஏற்பாடு செய்துள்ள‌து.

தொலைபேசி வ‌ழியே இல‌வ‌ச‌மாக‌ 800 24 22 எனும் எண்ணில் காலை எட்டு ம‌ணி முத‌ல் இர‌வு எட்டு ம‌ணி வ‌ரை ஞாயிறு முத‌ல் வியாழ‌ன் வ‌ரை அர‌பி, ஆங்கில‌ம் ம‌ற்றும் உர்தூ ஆகிய‌ மொழிக‌ளில் தொட‌ர்பு கொள்ள‌லாம்.

குறுந்த்க‌வ‌ல் ( எஸ்.எம்.எஸ் ) மூல‌ம் 200 வார்தைக‌ளுக்கு மிகாம‌ல் அனுப்ப‌ வேண்டும். மேல‌திக விப‌ர‌ங்க‌ளுக்கு www.awqaf.ae எனும் இணைய‌த்த‌ள‌த்தின் மூல‌ம் அறிந்து கொள்ள‌லாம்.

முஸ்லிம் முன்னேற்ற‌க் க‌ழ‌க‌ ர‌த்த‌தான‌ முகாம்:

துபாய் ம‌ண்ட‌ல் முஸ்லிம் முன்னேற்ற‌க் க‌ழ‌க‌த்தின் சார்பில் வ‌ரும் 22ம் தேதி காலை 9 ம‌ணிக்கு துபாய் அல் வாஸ‌ல் ம‌ருத்துவ‌ம‌னையில் நடைபெற‌ இருக்கிற‌து.

இம்முகாமில் ப‌ங்கேற்று ர‌த்த‌தான‌ம் வ‌ழ‌ங்க‌ விரும்பும் ச‌கோத‌ர‌ர்க‌ள் 050-7640972, 055-2910499, 04-2732087 ஆகிய‌ எண்க‌ளில் தொட‌ர்பு கொண்டு த‌ங்க‌ள் வ‌ருகையை உறுதி செய்ய‌லாம்.

தேரிழ‌ந்தூர் தாஜுத்தீன் பாட‌ல் தொகுப்பு குறுந்தக‌டு வெளியீடு:

துபாயில் தேரிழ‌ந்தூர் தாஜூத்தீன் அவ‌ர்க‌ள் பாடிய‌ ச‌மூக‌ விழிப்புண‌ர்வுப் பாட‌ல்க‌ளின் தொகுப்பு குறுந்த‌க‌டாக‌ வரும் 8ம் தேதி மாலை ஏழு ம‌ணிக்கு துபாய் லேண்ட்மார்க் ஹோட்ட‌லில் வெளியிட‌ப்ப‌ட‌ இருக்கிற‌து.

இப்பாட‌ல்க‌ள் இதுவ‌ரை க‌ண்டிராத‌ பாட‌ல்க‌ளின் வரிக‌ளுக்கேற்ப‌, காட்சி ம‌ற்றும் வ‌ர‌லாற்றுப் பிண்ண‌னியுட‌ன் பாட‌க‌ர் தேரிழ‌ந்தூர் தாஜூத்தீன் அவ‌ர்க‌ள‌து நேர்முக‌த்துட‌ன் பாடிப் ப‌திவு செய்ய‌ப்ப‌ட்ட‌து.

இந்நிக‌ழ்ச்சி குறித்த‌ விப‌ர‌ம‌றிய‌ மீரான் 050 5661493 ம‌ற்றும் முதுவை ஹிதாய‌த் 050 51 96433 ஆகியோரை தொட‌ர்பு கொள்ள‌லாம்.
மின்ன‌ஞ்ச‌ல் : [email protected]

நிக‌ழ்ச்சி அமைப்பினை ச‌ங்க‌ம‌ம் தொலைக்காட்சி செய்துள்ள‌து. முதுகுள‌த்தூர்.காம், ம‌ற்றும் ம‌ணிச்சுட‌ர் த‌மிழ் நாளித‌ழ் ஆகிய‌வை ஊட‌க‌ ஒருங்கிணைப்பினை செய்து வ‌ருகின்ற‌ன‌.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+