பிரபாகரன் உடலை பார்க்க வேண்டும்-உறவினர் கண்ணீர் பேட்டி

விடுதலை புலிகளின் இயக்க தலைவர் பிரபாகரனின் உறவினர்களான பரமேஸ்வரன்-ஜானகியம்மாள் தம்பதி கொல்லத்தில் வசித்து வருகிறார்கள். பிரபாகரனின் மரண செய்தி கேட்டு கதறி அழுத 71 வயதான ஜானகியம்மாள் கூறுகையில்,
பிரபாகரனை பற்றிய செய்திகளும், படங்களும் சமீப காலமாக பத்திரிக்கையிலும், டிவியிலும் வந்தபோது அவரை நேரில் ஒருமுறையாவது பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டோம்.
அவருக்கு ஒரு ஆபத்தும் நேர்ந்து விடக்கூடாது என பிரார்த்தனை செய்தோம். ஆனால் விதி மீறி அவரை தட்டி பறித்து விட்டது. அவர் சரண் அடைந்து இருக்கலாம். இனி இதையெல்லாம் சொல்லி ஒரு பயனும் இல்லை.
காலையில் நான் கடைக்கு போகும்போது பிரபாகரன் இறந்து போனதாக சிலர் சொல்ல கேட்டேன். முதலில் நான் நம்பவில்லை. அது வெறும் வதந்தியாக இருக்கலாம் என நினைத்தேன்.
ஆனால் சில பத்திரிக்கையாளர் என்னை தேடி வந்து பிரபாகரனை பற்றி கேட்டபோது அந்த செய்தி உண்மையாக இருக்கும் என தெரிந்தது. அவரது சாவு இவ்வளவு சிக்கிரம் வரும் என நாங்கள் நினைக்கவில்லை.
பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையின் குடும்ப வீடு கொல்லத்தில் பூந்தளதாலத்தில் உள்ளது. வேலுப்பிள்ளை எனக்கு மாமா முறை. சின்ன வயதிலேயே அவர் இலங்கைக்கு சென்று விட்டார். அங்கு இலங்கை பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு பிறந்த பையன்தான் பிரபாகரன்.
பிரபாகரனை அழைத்து கொண்டு ஒரு முறை இங்கும் வந்துள்ளார். அதன்பிறகு நான் அவரை பார்க்கவில்லை. ராஜீவ்காந்தி கொல்லப்பட்டபோது கேரளாவில் இருந்து மட்டுமல்ல, தமிழகத்தில் இருந்தும் போலீசார் என்னிடம் வந்து விசாரித்தார்கள்.
பிரபாகரன் உடலை பார்க்க வேண்டும் என்பது எனது ஆசை. ஆனால் அது நடக்காது என்பதை நினைக்கும்போது துக்கம் தாங்கமுடியவில்லை. எல்லாம் கடவுள் நிச்சயத்தபடிதானே நடக்கும் என்றார் அவர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications