ராமநாதபுரத்தில் தமிழ்ச் சங்க முப்பெரும் விழா
ராமநாதபுரம்: ராமநாதபுரம் தமிழ் சங்கத்தின் முப்பெரும் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ராமநாதபுரம் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் தின விழா, மாவட்ட நூற்றாண்டு துவக்க விழா, நகராட்சி பொன்விழா ஆண்டு நிறைவு விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் நேற்று நடைபெற்றன.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் ஆர். வாசுகி தலைமை வகித்து தமிழ்ச் சங்க நூலகத்தின் பெயர்ப் பலகையைத் திறந்து வைத்துப் பேசினார். ராமநாதபுரம் நகர்மன்றத் தலைவர் ஆர். லலிதகலா ரத்தினம் முன்னிலை வகித்தார். சங்கச் செயலர் சந்திரசேகரன் வரவேற்றார்.
தமிழ்ச் சங்க நிறுவனர் எஸ்.எம். கமாலின் உருவப் படத்தை தொழிலதிபர் எம். காதர் மைதீன் திறந்து வைத்தார். நிறுவனரின் நினைவுகள் குறித்து கவிஞர் நா. வேலுச்சாமி துரை, எம்.எம்.எஸ். செய்யது இப்ராஹிம், இல. நடராஜன் ஆகியோர் பேசினார்கள்.
நூற்றாண்டுகள் கண்ட மாவட்டம் என்ற தலைப்பில் தமிழ்ச் சங்க துணைத் தலைவர் எம்.எஸ்.கருணாநிதி, மூத்த பத்திரிகையாளர் எம்.எஸ். அல்லாபாக்ஸ், பொன்விழா கண்ட நகராட்சி என்ற தலைப்பில் அ. அன்வர்தீன் ஆகியோர் பேசினர்.
விழாவில் தமிழ்ச் சங்க வளர்ச்சிக்கு நக்கீரன் கோபால் ரூ. 25 ஆயிரம் நன்கொடையாக வழங்கியதுடன் குற்றம் குற்றமே என்ற தலைப்பில் பேசினார்.
இலக்கிய இன்பம் என்ற தலைப்பில் கவிஞர் தெய்வச்சிலை பேசினார். விழா ஏற்பாடுகளை சங்கத் தலைவர் அப்துல் சலாம், துணைத் தலைவர் விவேகானந்தன், செயலர் சந்திரசேகரன், பொருளாளர் சுந்தர மூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.
விழாவில் விபத்து மீட்புச் சங்க தலைவர் தேவசேனாதிபதி, சங்க துணைத் தலைவர் கு. விவேகானந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications