டைட்டானிக் கப்பலில் பயணம் செய்த கடைசி நபரும் மரணம்

கடந்த 1912ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி அமெரிக்காவில் இருந்து இங்கிலாந்து சென்று கொண்டிருந்த டைட்டானிக் என்ற சொகுசு கப்பல் பனிபாறையில் மோதி அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கியது.
இந்த விபத்தில் 1,517 பேர் மரணமடைந்தனர். 706 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். அவர்களில் ஒருவர் தான் மில்வினா டீன் என்ற பெண்மணி. அந்த கப்பலில் மில்வினா டீன் தனது தந்தை பெர்ட்ராம், தாயார் ஜார்கட்டா மற்றும் அண்ணன் பெர்ட் ஆகியோருடன் வந்திருந்தார்.
விபத்தில் அவரது தந்தை மரணமடைந்துவிட்டார். அப்போது இரண்டு மாத கை குழந்தையாக இருந்த மில்வினா டீன், அவரது தாயார் மற்றும் சகோதரர்கள் உயிர் பிழைத்தனர்.
இந்த விபத்து டைட்டானிக் என்ற பெயரில் ஆங்கில படமாக எடுக்கப்பட்டு, ஆஸ்கர் விருதுகளை அள்ளி சென்றது. உலகம் முழுவதும் கோடி கணக்கில் வசூலை அள்ளி குவித்தது.
தற்போது விபத்து நடந்து கிட்டதட்ட நூறு ஆண்டுகளை நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் இந்த விபத்தில் உயிர் பிழைத்தவர்களில் மில்வினாவை தவிர்த்து மற்ற அனைவரும் ஏற்கனவே இறந்துவிட்டனர்.
திருமண பந்தத்தில் இணையாமல் தனிமையில் வாழ்ந்து வந்த மில்வினா கடைசி காலத்தில் வறுமையில் வாடினார். இதையடுத்து இவர் தனது வீட்டு பொருட்களை ஏலத்துக்கு விட்டு வாழ்க்கை நடத்த வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்.
இதை கேள்விப்பட்ட டைட்டானிக் திரைப்பட நாயகன் டீ கேப்ரியோ, நாயகி கேட் வின்ஸ்லெட் மற்றும் இயக்குனர் ஜேம்ஸ் காம்ரூன் ஆகியோருக்கு அவருக்கு ரூ. 17 லட்சம் உதவி செய்தனர். மேலும் அவர் வறுமை காரணமாக ஏலத்தில் விட்ட அவரது பொருட்கள் அனைத்தும் அவரிடமே மீண்டும் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் 97 வயதான மில்வினா நேற்று முன்தினம் வயது முதிர்வு மற்றும் நிமோனியா காய்ச்சல் காரணமாக இங்கிலாந்து மருத்துவமனையில் மரணமடைந்தார். இது குறித்து சர்வதேச டைட்டானிக் சமுதாயம் என்ற அமைப்பின் தலைவர் சார்ஸல் ஹாஸ் கூறுகையில், மில்வினா நகைச்சுவையான பெண்மணி. அன்பானவர் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications