பெங்களூரில் 7ம் தேதி தமிழர்கள் மனிதச் சங்கிலி
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: தமிழ் ஈழம் அடைய, தமிழர் உயிர், உடமை காக்க கோரி பெங்களூரில் வருகிற 7ம் தேதி மாபெரும் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெறவுள்ளது.
காலை 10 மணிக்கு பெங்களூர் கிழக்கு ரயில் நிலையம் அருகில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி கப்பன் சாலை வரை மனிதச் சங்கிலி அமைக்கப்படுகிறது.
இயக்குநர் சீமான் சிறப்புரை ஆற்றுகிறார். மற்றும் கர்நாடகா, தமிழ் நாட்டு தமிழ் உணர்வாளர்களும், மனித உரிமை அமைப்புகளும், பகுத்தறிவாளர்களும் கலந்து கொள்கிறார்கள்.
ஆண்கள் , பெண்கள், இளைஞர்கள், இளம்பெண்கள், முதியவர்கள், சிறார்கள் அனைவரும் கலந்து கொண்டு தமிழர்களின் இன மான உணர்வு, போராட்டம் , லட்சியம் சாக வில்லை என்பதை நிரூபிக்க வாருங்கள். வெற்றியை நிரூபித்து இவ் உலகத்தில் வரலாறு படைப்போம் என்று நிலவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications