வறட்சி-களக்காட்டில் பரிதவிக்கும் வன விலங்குகள்

களக்காடு மலைப்பகுதியில் அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் வெயில் கொளுத்தி வருகிறது. சில நாட்களுக்கு முன்னதாக லேசான மழை பெய்ததோடு சரி. அதன் பின்னர் மழை வருவதற்கான எந்த அறிகுறியும் காணப்படவில்லை.
களக்காடு புலிகள் காப்பாகம் இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான தலையணை, தேங்காய் உருளி அணை, முதலிருப்பான், குளிராட்டி, செங்கல்தேரி, கோழிக்கால், கருங்கல்கசம் ஆகியவை நல்ல எழில் சூழ்ந்த இடங்கள். ஆனால், தற்போது நீர் இல்லாமல் இப்பகுதியில் இருந்த நீர்நிலைகள் வரண்டுவிட துவங்கியுள்ளன.
கேரளாவில் பருவ மழை தொடங்கும் போது இப்பகுதிகளிலும் மழை பெய்யும். இதனால் அருவி மற்றும் நீரோடைகளில் தண்ணீர்வரத்து அதிகரித்து சீசன் களை கட்டும்.
தற்போது மழை இல்லாததால் அணைகள் வறண்டு காணப்படுகிறது. பச்சையாற்றில் மட்டும் சிறிதளவு தண்ணீர் உள்ளது. அதுவும் சில நாட்களில் வற்றி விடும் என வனஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மலை உச்சியில் உள்ள செங்கல்தேரியில் எப்போதும் தண்ணீர் ஓடுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு அங்கேயும் தண்ணீர் வற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பல அணைகளில் தண்ணீர் குறைந்தளவே ஓடுகிறது. மொத்தத்தில் மலை பகுதிகளில் கடும் வறட்சி காணப்படுகிறது.
இது தொடர்ந்தால் வனவிலங்குகள் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டு, ஊருக்குள் நுழையும் அபாயம் ஏற்படலாம் என்று சமூக ஆர்வலர்கள் கவலையுடன் கூறுகின்றனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications