திருவண்ணாமலை சுற்றுலா தலமாக மாற்றப்படும்-தமிழக அரசு
திருவண்ணாமலை: திருவண்ணாமலையை சிறந்த சுற்றுலாத்தலமாக மாற்றப்படும். அங்கு விரைவில் சுற்றுலா அலுவலகம் திறக்கப்படும் என்று தமிழக அமைச்சர் வேலு தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனா மரத்தூரில் இரண்டு கோடை விழாவின் துவக்க விழா நடைபெற்றது. வனத்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ராஜேந்திரன் தலைமை தாங்கினர்.
விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழக அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார். அப்போது அவர் பேசுகையில்,
மலைவாழ் மக்களுக்கு சிறப்பு சலுகையாக 10 லிட்டர் மண்ணெண் ணெய் வழங்கப்படுகிறது. இங்கேயே சாதிச்சான்று களை வருவாய்த்துறை அலுவலகங்கள் நேரில் வந்து வழங்கி வருகின்றனர். மலைப்பகுதியில் 6வது பகுதி நேர ரேஷன் கடை திறக்கப்பட்டுள்ளது.
ஜமுனா மரத்தூர் தற்போது சுற்றுலா தலமாக வளர்ந்துள்ளது. இங்கு துணை மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஜமுனா மரத்தூரில் இருந்து பரமனந்தலுக்கும் ரூ. 51 கோடியில் சாலைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.
மேலும், ரூ. 10 லட்சத்தில் மினி சூப்பர் மார்கெட், 8 ஏக்கரில் புதிய பூங்கா, பீமன் நீர்வீழ்ச்சி மேம்படுத்துதல் உள்ளிட்ட ஏராளமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருவண்ணாமலைக்கு தமிழகத்தில் மட்டும் இன்றி வெளிநாடுகளில் இருந்தும் அதிக அளவில் வருகை தருகின்றனர்.
எனவே இங்கு சுற்றுலா அலுவலகம் அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதற்காக அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் திருவண்ணாமலை மிகச்சிறந்த சுற்றுலா தலமாக மாற்றப்படும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications