பிள்ளைகளின் கல்விக்கு உதவி வேண்டி நிற்கும் கடலூர் டெய்லர்
சென்னை: கடலூரைச் சேர்ந்த டெய்லரான நூர் முகம்மது என்பவர் தனது குடும்ப நிதி சிரமத்திற்கு மத்தியிலும் மூன்று பிள்ளைகளையும் படிக்க வைக்க வேண்டும் என்ற தீராத வேட்கையில், உதவி வேண்டி நிற்கிறார்.
அவர் கூறுகையில்,
நான் கடலூர் மாவட்டத்திலுள்ள நெல்லிக்குப்பம் மற்றும் நடுவீரப்பட்டு அருகிலுள்ள சி.என்.பாளையம் என்ற கிராமத்தில் மனைவி மற்றும் இரண்டு மகள்கள், ஒரு மகன் ஆகியோருடன் வசித்து வருகிறேன்.
அதே கிராமத்தில் பல்லாண்டுகளாக சொந்தமாக தையல் தொழிலையும் செய்து வருகிறேன். நாளொன்றுக்கு வருமானம் ரூ. 50லிருந்து ரூ. 100 வரை மட்டுமே கிடைக்கும்.
என் பிள்ளைகளில் மூத்த மகள் யாஸ்மின் தற்போது திருச்சியிலுள்ள ஒரு மகளிர் கல்லூரியில் BCA படிப்பில் இரண்டாமாண்டு சேருவதற்கு தயாராக இருக்கிறார்.
இளைய மகள் சுமைய்யா தற்போது ப்ளஸ்2 முடித்து விட்டு அதே கல்லூரியில் B.Sc., (Nutrition & Dietetics) படிப்பில் சேருவதற்கு விண்ணப்பித்து உள்ளார்.
மகனார் முஹம்மது அனஸ் தற்போது பத்தாவது முடித்து விட்டு மார்க்கக் கல்வியுடன் இணைந்த படிப்பை தொடர திட்டுமிட்டு உள்ளார்.
மகள்கள் இருவரையும் ப்ளஸ்2 வரையும், மகனாரை பத்தாவது வரையும் மிகவும் சிரமப்பட்டு படிக்க வைத்தேன்.
ஆனால், தற்போது மேலும் படிக்க வேண்டும் என்று பிள்ளைகள் விரும்புகிறார்கள்.
ஆனால் எனக்கு போதிய வசதி இல்லை. பல இடங்களில் கடன் கேட்டும் கிடைக்கவி்லை.
எனது இரு மகள்களும் இந்த ஆண்டு கல்வி கற்க சுமார் 60,000 ரூபாய் வரை தேவைப்படுகிறது. கடந்த வருடம் செய்த செலவின் கடனே இன்னும் முடிவடையாத சூழலில் இப்போது என் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக மேலும் கடன் வாங்க முடியாத நிலை.
இதற்கு தாராள மனம் படைத்தோர் உதவ வேண்டும் என கோரியுள்ளார்
நூர் முகம்மதுவின் பிள்ளைகளுக்கு அன்புள்ளம் கொண்டோர் உதவலாம். உதவ நினைப்போர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி, வங்கிக் கணக்கு விவரம்..
எஸ். நூர் முஹம்மது (டைலர்),
197/ 4, மேலாண்ட வீதி,
சி.என். பாளையம் - 607102,
கடலூர் மாவட்டம்.
செல் எண்: (+91) 9786453164
வங்கி கணக்கு விபரங்கள் (Bank Account Details):
S. Noor Mohamed,
A/C # 6655,
Indian Overseas Bank,
Naduveerapattu Branch (280),
Cuddalore District,
Pin code - 607102
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications